மேலும்

மைத்திரியின் பரப்புரை மேடை மீது துப்பாக்கிச் சூடு – 3 பேர் காயம்

இரத்தினபுரியில் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று காலை பரப்புரை மேற்கொள்ளவிருந்து மேடை மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இறுதிக்கட்டத்தை எட்டுகிறது அதிபர் தேர்தல் – இன்றுடன் பரப்புரைகள் முடிவு

வரும் 8ம் நாள் நடக்கவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கான பரப்புரைகள் யாவும், இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

‘ மகிந்தவை வெளியேற்ற ஒன்று திரளுங்கள்’ – முதல்வர் விக்னேஸ்வரன் அழைப்பு

வடமாகாண சபையை முடக்கப் பார்த்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை, அவரது இருக்கையை விட்டு வெளியேற்ற ஒன்று திரண்டு வாருங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளார்,  வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்.

நாட்டை விட்டுத் தப்பியோடமாட்டேன் – மகிந்த வாக்குறுதி

வரும் 8ம் நாள் நடக்கவுள்ள அதிபர் தேர்தலுக்குப் பின்னர் தான் சிறிலங்காவை விட்டுத் தப்பி ஓடமாட்டேன் என்றும், தொடர்ந்து நாட்டிலேயே இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச.

8ம் நாளுக்குப் பின்னர் எதிரணியில் இருப்பேன் என்கிறார் அமைச்சர் மேர்வின் சில்வா

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான பரப்புரையில் இருந்து ஒதுங்கியுள்ள, அமைச்சர் மேர்வின் சில்வா, விரும்பிய யாருக்காவது வாக்களிக்கும்படி பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

திரு.பிரபாகரன் என்று அழைத்ததை மறந்து போனாரா மகிந்த? – மங்கள சமரவீர கேள்வி

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவும் கூட, விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனை, மரியாதையாக திரு.பிரபாகரன் என்று அழைத்துள்ளார் என்று, ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

தேர்தலில் இராணுவத் தலையீடு குறித்து வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் கவலை

அரச வளங்களின் பயன்பாடு மற்றும், இராணுவத் தலையீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கவலையடைந்துள்ளதாக, சிறிலங்கா அதிபர் தேர்தலைக் கண்காணிக்க வந்துள்ள, வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்கா அதிபர் முஸ்லீம்களின் வாக்குகளையும் தற்போதைய தேர்தலில் பெற்றுக்கொள்ள முடியாத நிலை?

சிங்கள பௌத்த சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் திரு.ராஜபக்ச மற்றும் திரு.மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கிடையில் சிங்கள மக்களின் வாக்குகள் பிரிக்கப்படுவதால் முஸ்லீம் மக்களினதும் தமிழ் மக்களினதும் வாக்குகள் மிக முக்கியமானவை என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெனிவாவில் நிறுத்தவே கே.பியை வைத்திருக்கிறதாம் சிறிலங்கா

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் குற்றச்சாட்டுகளை முறியடிப்பதற்கு, சரியான இடத்தில், சரியான நேரத்தில் பயன்படுத்துவதற்காகவே, விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளர் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனை பாதுகாப்பாக வைத்திருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சல்மான் கான் வீட்டுக்கு முன்பாக தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

சிறிலங்கா அதிபர் தேர்தலில், மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக பரப்புரை செய்த ஹிந்தி நடிகர் சல்மான் கானின் வீட்டின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.