மேலும்

நரேந்திர மோடிக்கு விக்னேஸ்வரன் எழுதிய கடிதம் – இந்திய அதிகாரிகள் அதிர்ச்சி

பிரேமானந்தா ஆசிர வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மூவரை விடுதலை செய்யுமாறு கோரி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடிதம் அனுப்பியுள்ளது இந்திய அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாக ரைம்ஸ் ஒவ் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

100 நாட்களில் சாதித்தது என்ன? – தொலைக்காட்சி உரையில் சிறிலங்கா அதிபர் விளக்கம்

சிறிலங்காவின் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டு 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்றிரவு 9 மணியளவில் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் சிறப்புரை ஆற்றினார். அதில் அவர் தெரிவித்ததாவது-

அமைச்சரவை அங்கீகரித்த புதிய தேர்தல் முறை – சுமந்திரன் உள்ளிட்ட மூவர் குழு நியமனம்

புதிய தேர்தல் பொறிமுறை தொடர்பான வரைவைத் தயாரிப்பதற்குப் பொறுப்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் பசில் ராஜபக்ச

சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, கொழும்பு தேசிய மருத்துவமனையின் கட்டண விடுதியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துறைமுக நகரத் திட்டத்தில் ஊழல் இடம்பெறவில்லை – சிறிலங்கா அரசு

இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள, சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்படும் கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தில் எந்த ஊழலும் இடம்பெறவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது.

கோத்தாவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் கையில் சர்ச்சைக்குரிய சிங்கக்கொடி

கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக கொழும்பில் இன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும், ஆதரவாளர்களும், சிறுபான்மை இனங்களை அடையாளப்படுத்தும் பகுதிகள் நீக்கப்பட்ட சிறிலங்காவின் தேசியக்கொடியை வைத்திருந்தது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஆணைக்குழுவை விட்டு வெளியேறினார் கோத்தா – விசாரணைக்கு 90 நாள் காலஅவகாசம்

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் முன்பாக இன்று காலை முன்னிலையாக முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு மேலதிக காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதையடுத்து, அவர் அங்கிருந்து வெளியேறினார்.

கோத்தாவிடம் விசாரணை – வெளியே தடையை மீறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணைக்குச் சமூகமளித்துள்ளார். இன்று காலை சுமார் 9.30 மணியளவில் அவர் ஆணைக்குழுவின் பணயகத்துக்கு வருகை தந்தார்.

புதிய முறைமையின் கீழேயே அடுத்த தேர்தல் – அடம்பிடிக்கிறது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 255 ஆக அதிகரிக்கும், தேர்தல் முறை மாற்றம் குறித்து புதிய யோசனை ஒன்றை முன்வைத்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, புதிய தேர்தல் முறைமையின் கீழேயே அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

“நான் இன்னும் ஓய்வுபெறவில்லை” – மீண்டும் வருவேன் என்று சூசகமாக மிரட்டுகிறார் மகிந்த

தாம் இன்னமும் அரசியலில் இருந்து ஓய்வுபெறவில்லை என்று, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஏஎவ்பி செய்தியாளர் அமால் ஜெயசிங்கவுக்கு நேற்று அளித்த செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.