மேலும்

நேபாளத்தில் பழுதடைந்திருந்த சிறிலங்காவின் இராட்சத விமானம் – கொழும்பு நோக்கிப் புறப்பட்டது

நேபாளத்தில் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிப் பொருட்களையும், மீட்புப் பணியில் ஈடுபடுவதற்கான படையினர் மற்றும் மருத்துவர்களையும் ஏற்றிச் சென்ற சிறிலங்கா விமானப்படை விமானம், திருத்தப்பட்டு கொழும்பு நோக்கிப் புறப்பட்டுள்ளதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கியுடன் மைத்திரியை நெருங்கிய இராணுவ கோப்ரல் – நாமலிடமும் விசாரணை

அம்பாந்தோட்டையில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு வளையத்தை, நாமல் ராஜபக்சவின் மெய்க்காவலர் துப்பாக்கியுடன் ஊடறுத்து நுழைந்த விவகாரம் குறித்து, நாமல் ராஜபக்சவிடமும் விசாரணை நடத்தப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

19ஆவது திருத்தம் நிறைவேறுமா?- இன்று மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு

சிறிலங்காவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 19ஆவது அரசிலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறவுள்ளது.

சிறிலங்காவில் அரசியல்தீர்வுக்கு ஏற்ற சூழல் – தமிழ்நாட்டு கட்சிகள் குழப்பக் கூடாது என்கிறார் மோடி

சிறிலங்காவில் நிலவும் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு ஒன்று காணப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நேற்று புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளின் குழுவொன்று சந்தித்துப் பேச்சு நடத்தியது.

19ஆவது திருத்தம் ஜனநாயகம், நல்லாட்சியை உறுதிப்படுத்தும் – நாடாளுமன்றத்தில் சம்பந்தன்

19ஆவது திருத்தச்சட்டம் ஜனநாயகத்துக்கு வழிகோலுவதுடன், நல்லாட்சியையும் உறுதிப்படுத்தும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

ஜோன் கெரியின் சிறிலங்கா பயணத்தை உறுதிப்படுத்தியது அமெரிக்கா

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி வரும் சனிக்கிழமை, மே 02ஆம் நாள் சிறிலங்காவுக்கு அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.இதனை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் நேற்று உறுதிப்படுத்தியுள்ளது.

மைத்திரி வாக்குறுதி – உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார் சோபித தேரர்

19வது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, இன்று ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டத்தை, சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் அமைப்பாளருமான கோட்டே நாகவிகாரையின் விகாராதிபதி வண.மாதுளுவாவே சோபித தேரர், கைவிட்டுள்ளார்.

பிரதமர் பதவிக்குப் போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெறுவேன் – அல்- ஜசீராவுக்கு மகிந்த செவ்வி

நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் பதவிக்குப் போட்டியிட்டால் தான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.அல்-ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இராணுவமயமாக்கல்: சிறிலங்காவின் நிலையான அமைதிக்கு முக்கிய சவால்

2009ல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட போரின் மூலம் சிங்கள தேசம் பெற்றுக்கொண்டுள்ள வெற்றியை தொடர்ந்தும் நிலைத்திருக்கச் செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் இராணுவப் பலத்தை முதலில் குறைக்க வேண்டும்.

’19’ மீதான விவாதம் தொடங்கியது – அனைவரையும் ஆதரிக்க மைத்திரி கோரிக்கை

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று காலை 19வது திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதம் இன்று காலை ஆரம்பமாகி சுமுகமாக நடைபெற்று வருகிறது. இன்று காலை நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சிறப்பு உரையாற்றியதையடுத்து, விவாதம் ஆரம்பமானது.