மேலும்

சிறிலங்காவில் ஊடகங்களின் நிலை குறித்து அறிய வருகிறார் அமெரிக்க உயர் அதிகாரி

கடந்த ஜனவரி 8ஆம் நாள் நடந்த அதிபர் தேர்தலுக்குப் பின்னர், சிறிலங்காவில் ஊடகங்களின் நிலை குறித்து மதிப்பீடு செய்வதற்காக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் இந்த வாரம் கொழும்பு வரவுள்ளார்.

முதலமைச்சர் நிதியத்தை ஆரம்பிக்க வடக்கு மாகாணசபைக்கு அனுமதி அளித்தார் மைத்திரி

முதலமைச்சர் நிதியத்தை ஆரம்பிக்க வடக்கு மாகாணசபைக்கு அனுமதி அளிக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று சிறிலங்கா அதிபருக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் நடந்த சந்திப்பின் போதே, இதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க – சிறிலங்கா உறவுகள் தொடருமா?

ராஜபக்ச அரசாங்கத்தின் மீதான ஊழல் மோசடி விசாரணைக்கு அமெரிக்கா தனது ஆதரவை வழங்குவதன் மூலம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்ச தனக்கான ஆதரவு வாக்குகளை இழப்பதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது.

சிறிலங்காவுடன் நிலையான இராணுவ உறவை விரும்புகிறதாம் சீனா

சிறிலங்காவுடன் தொடர்ச்சியானதும் நிலையானதுமான இராணுவ உறவுகள் தொடர வேண்டும் என்று சீனப் பாதுகாப்பு அமைச்சர் சாங் வான்குவான் தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களை சாட்சியப்படுத்த புதிய செயலி அறிமுகம்

போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தவும், ஆதாரப்படுத்தவும் வசதியாக  கைத்தொலைபேசி செயலி ஒன்று (mobile phone app)  நேற்று புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வடக்கில் போதைப்பொருளை பழக்கப்படுத்தியது சிறிலங்கா இராணுவமே – முதலமைச்சர் குற்றச்சாட்டு

இராணுவத்தின் நிர்வாகத்தின் கீழேயே வடக்கில் போதைப்பொருளுக்கு மக்கள் பழக்கப்படுத்தப்பட்டனர். இதற்கு சிறிலங்கா இராணுவத்தினரே பொறுப்புக் கூற வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

20வது அரசியலமைப்பு திருத்த யோசனைக்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம்

20ஆவது திருத்தச்சட்டமாக கொண்டு வரப்படவுள்ள தேர்தல் முறை மாற்ற யோசனைக்கு சிறிலங்கா அமைச்சரவை நேற்றுமாலை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

புலம்பெயர் தமிழர் மத்தியில் ஊடுருவிய சிறிலங்கா புலனாய்வு அமைப்பு – அம்பலமாகும் இரகசியம்

சிறிலங்காவின் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண மற்றும் யாழ்ப்பாணத்திலும், ஐரோப்பாவிலும் இயங்கும் டான் தொலைக்காட்சியின் பணிப்பாளர் எஸ்.என்.குகநாதன் ஆகியோரின் வங்கிக் கணக்குகளை விசாரணை செய்ய கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

லண்டனில் நடத்தப்பட்ட பேச்சுக்கள் குறித்து விடுக்கப்பட்ட கூட்டறிக்கை

அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் மீளக்குடியேறும் குடும்பங்களுக்கு 2000 வீடுகளை அமைப்பதற்கான நிதியுதவியைப் பெறுவதற்கு, கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள், இராஜதந்திரிகளுக்கான கூட்டம் ஒன்று கூட்டப்படவுள்ளது.

வடக்கில் போதைப்பொருளை ஒழிக்க முதலமைச்சர் தலைமையில் சிறப்பு செயலணி

வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனையை முற்றாக ஒழிப்பதற்காக போதைப்பொருள் ஒழிப்பு செயலணி ஒன்று, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் உருவாக்கப்படவுள்ளது. சிறிலங்காவின் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை இந்த முடிவை எடுத்துள்ளது.