மேலும்

சுதந்திரக் கட்சிக்குள் ஆதிக்கத்தை விரிவுபடுத்துகிறார் மைத்திரி

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அவிசாவளைத் தொகுதி அமைப்பாளராக பிரசன்ன சோலங்காராச்சி நியமிக்கப்பட்டுள்ளார். இன்று சிறிலங்கா அதிபர் செயலகத்தில் வைத்து, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த நியமனக் கடிதத்தை வழங்கினார்.

ஜனநாயகம் குறித்துப் போதிக்க வரவில்லை – ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக் குழு

தாம் சிறிலங்கா வந்திருப்பது, தேர்தலைக் கண்காணிக்கவே தவிர, ஜனநாயகம் பற்றி போதிப்பதற்காக அல்ல என்று நாடாளுமன்றத் தேர்தலைக் கண்காணிக்க வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவின் தலைவர் கிறிஸ்டியன் பிரேடா தெரிவித்துள்ளார்.

இந்தியப் பெருங்கடலில் சீனக் கடற்படைக்கு உரிமை உள்ளதாம்

இந்தியப் பெருங்கடலில், தனது நலன்களைப் பாதுகாக்கின்ற உரிமையை சீனக் கடற்படை கொண்டிருப்பதாகவும், அதற்கு இந்தியா பரந்த மனதுடன் இடமளிக்க வேண்டும் என்றும் சீன இராணுவத்தின் அதிகாரபூர்வ சிந்தனையாளர் குழாமின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க தாக்குதலில் கோட்டை விட்டவரே கேத்தாராமவிலும் கோட்டை விட்டார்

கொழும்பில் கேத்தாராம மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த சிறிலங்கா- பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான துடுப்பாட்டப் போட்டியில், பார்வையாளர்களுக்கிடையில் மோதல் நடந்த போது, அந்தப் போட்டியின் பாதுகாப்புக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்த அதிகாரி மதுபோதையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ராஜீவைத் தாக்கிய விஜித ரோகண முக்கியமான நபர் அல்லவாம்- பிஜேபி கூறுகிறது

ராஜீவ்காந்தியைத் தாக்கிய முன்னாள் கடற்படைச் சிப்பாயான விஜேமுனி விஜித ரோகண டி சில்வா, ஒரு முக்கியமான நபர் அல்ல என்றும், அவர் கட்சியை விட்டு வெளியேறுவதால் தமக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும்  பொது ஜன பெரமுன (பிஜேபி) தெரிவித்துள்ளது.

சிறிலங்காவுடனான உறவுகளில் நல்லிணக்கம் மீது கூடுதல் கவனம் – இந்தியா கூறுகிறது

சிறிலங்காவுடனான உறவுகளில் சிறிலங்காவின் தேசிய நல்லிணக்கம் மற்றும் மீள்கட்டுமானம் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தப்படுவதாக இந்தியா தெரிவித்துள்ளது.

சயனைட் குப்பிகள், செய்மதி தொலைபேசியுடன் தமிழ்நாட்டில் ஐவர் கைது – பிரிஐ தகவல்

தமிழ்நாடு, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உச்சிப்புளியில், இரு இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் சயனைட் குப்பிகள், புவிநிலைகாட்டிகள்( ஜிபிஎஸ்) மற்றும் செய்மதி தொலைபேசியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

மகிந்தவை பிரதமராக நியமிக்காவிடின் செங்கோலைக் கைப்பற்றுவோம் – எச்சரிக்கிறது மகிந்த அணி

மகிந்த ராஜபக்சவைப் பிரதமராக நியமிக்கா விட்டால், செங்கோலைத் தூக்கிக் கொண்டு, தாம் நாடாளுமன்றத்தைச் சுற்றி ஓடுவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் அமைச்சர் சாலிந்த திசநாயக்க.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் வெற்றிபெற முடியாது – ராஜபக்சக்களைத் தாக்குகிறார் கருணா

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் வெற்றி பெற முடியாது என்று தெரிவித்துள்ள முன்னாள் பிரதிஅமைச்சரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின மத்திய குழு உறுப்பினருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், ராஜபக்சக்களை கடுமையாக சாடியிருக்கிறார்.

கேள்விக்குறியாகும் சிறிலங்காவின் எதிர்காலம் – ‘தி ஹிந்து’ ஆசிரியர் தலையங்கம்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் எடுத்துள்ள தீர்மானமானது பெரியளவில் அதிர்ச்சி தரக்கூடிய ஒன்றல்ல.