மேலும்

நாக்பூர் சிறையில் தூக்கிலிடப்பட்டார் யாகூப் மேமன்

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட யாகூப் மேமனுக்கு இன்று காலை 6.30 மணியளவில் நாக்பூர் சிறைச்சாலையில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிகாரப்பகிர்வு – ஒரே நாளில் குத்துக்கரணம் அடித்தது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

ஆட்சியமைத்து ஆறு மாதங்களுக்குள்- 13வது திருத்தச்சட்டத்தின் கீழ் மாகாணங்களுக்கு அதிகாரங்களை அளித்து, தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாக வாக்குறுதி அளித்திருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஒரே நாளில் அந்த நிலைப்பாட்டில் இருந்து குத்துக்கரணம் அடித்துள்ளது.

உள்நாட்டு விசாரணை நடத்த சிறிலங்கா அனுமதிக்கப்பட வேண்டுமாம் – மகிந்த சமரசிங்க கூறுகிறார்

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில், இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க, எந்த அனைத்துலகத் தலையீடுகளும் இல்லாத உள்நாட்டு விசாரணை ஒன்றை நடத்த சிறிலங்கா அனுமதிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார், சிறிலங்காவின் நிதி இராஜாங்க அமைச்சர் மகிந்த சமரசிங்க.

சிறிலங்காவின் மிகஉயர்ந்த கட்டடத்தை அமைக்கிறது இந்தியா

சிறிலங்காவில் 96 மாடிகளைக் கொண்ட, மிகஉயரமான கட்டடத்தை கொழும்பின் ராஜகிரிய பகுதியில், இந்திய நிறுவனம் ஒன்று, அமைக்கவுள்ளது. இதற்கான உடன்பாடு நேற்று கையெழுத்திடப்பட்டுள்ளது.

சமஸ்டி கேட்கும் சம்பந்தன் குப்பைத் தொட்டிக்குள் போவாராம் – ஜாதிக ஹெல உறுமய கூறுகிறது

சமஸ்டி ஊடாக நாட்டை துண்டாட முயன்றால், சம்பந்தன் போன்றவர்கள் வரலாற்றில் குப்பைத் தொட்டிக்குள் போக நேரிடும் என்று எச்சரித்துள்ளார், ஜாதிக ஹெல உறுமயவின் பேச்சாளர் நிசாந்த சிறிவர்ணசிங்க.

மட்டக்களப்பில் இளம்பெண்ணை சுட்டுக்கொன்ற ஈபிடிபி உறுப்பினருக்கு மரணதண்டனை

மட்டக்களப்பு, வந்தாறுமூலையில் கடந்த 2007ஆம் ஆண்டு இளம்பெண் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த, ஈ.பி.டி.பி உறுப்பினர் ஒருவருக்கு நேற்று மட்டக்களப்பு மேல்நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் குறித்த வடக்கு மாகாண முதலமைச்சரின் நிலைப்பாடு

சிறிலங்காவில் எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் பற்றிய தனது நிலைப்பாடுகளைத் தெளிவுபடுத்தி, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-

சிறிலங்காவில் இராணுவத் தளம் அமைக்கப் போகிறதாம் அமெரிக்கா – திஸ்ஸ விதாரண கூறுகிறார்

சிறிலங்காவில்  இராணுவத் தளங்களை அமைக்க அமெரிக்க எண்ணம் கொண்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் சமஸ்டி யோசனையை ஐதேக நிராகரிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள, சமஸ்டி முறையில் அதிகாரங்களைப் பகிரும் அரசியல் தீர்வை ஐக்கிய தேசியக் கட்சி நிராகரித்துள்ளது.

மகிந்தவின் களுத்துறைக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக மகிந்த சமரசிங்க அறிவிப்பு

களுத்துறையில் எதிர்வரும் ஓகஸ்ட் 3ஆம் நாள் நடக்கவுள்ள, மகிந்த ராஜபக்ச பங்கேற்கும் பரப்புரைக் கூட்டத்தில் தாம் பங்கேற்கப் போவதில்லை என்று நிதி இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளருமான மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.