மேலும்

மகிந்தவை மின்சார நாற்காலிக்கு கொண்டு செல்ல முனைகிறது கூட்டமைப்பு – டிலான் பெரேரா

போர்க்குற்றங்களுக்காக மகிந்த ராஜபக்சவைத் தண்டிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அனைத்துலக சமூகமும் முயற்சிப்பதாகவும், அவரை மின்சார நாற்காலிக்குக் கொண்டு செல்லும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரான முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா.

மகிந்தவிடம் கௌரவமாக ஓய்வுபெறும் திட்டமில்லையாம் – அவரது பேச்சாளர் கூறுகிறார்

அரசியலில் இருந்து கௌரவமான முறையில் விலக இடமளிக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுக்கவில்லை என்று அவரது பேச்சாளர் ரொகான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.

அரசியல் புலிகளை அழிக்காமல் விட்டது தவறு – முற்றாக அழிக்கப் போவதாக கோத்தா சூளுரை

அரசியல் புலிகளை அழிக்காமல் விட்டு விட்டதாகவும், வடக்கை மீண்டும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து புலிகளின் தலையீட்டை முழுமையாக அழிக்க வேண்டும் என்றும் சூளுரைத்திருக்கிறார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தல் – அஞ்சல் வாக்களிப்பு இன்று ஆரம்பம்

சிறிலங்கா நடாளுமன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமாகவுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இன்று அஞ்சல் மூலம் வாக்களிக்கவுள்ளனர்.

வீழ்வதற்கு அல்ல நிமிர்வதற்கு….!

மீண்டும் ஒரு தேர்தல் திருவிழாவைச் சந்தித்து நிற்கிறது ஈழத்தமிழினம். விரும்பியோ விரும்பாமலோ, இதனை எதிர்கொண்டாக வேண்டிய கட்டாயம். இது சிறிலங்கா நாடாளுமன்றத்தின் ஆசனங்களை நிரப்புவதற்கான தேர்தல். 

விக்னேஸ்வரனின் பக்கசார்பின்மை எழுப்பும் கேள்விகள்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னமும், இரண்டு வாரங்களே இருக்கின்ற நிலையில், எல்லாக் கட்சிகளுமே தம்மால் இயன்றளவுக்கு மக்களின் ஆதரவைத் திரட்டிக் கொள்வதற்கான பிரசார உத்திகளைக் கையாண்டு வருகின்றன.

தொங்கு நாடாளுமன்றம் அமையும் – சிறிலங்கா அரச புலனாய்வுச் சேவையின் கணிப்பு

வரும் நாடாளுமன்றத் தேர்தல் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும், ஐதேகவுக்கும் இடையில் கடும் போட்டியாக அமையும் என்றும், எனினும், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காது என்றும், சிறிலங்கா அரச புலனாய்வுச் சேவை அளித்துள்ள அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

தமிழர் நலன்களை வெற்றி கொள்வதற்கான தேர்தல் இது – யதீந்திரா

அமெரிக்கா உன்னிப்பாக கண்காணித்துக் கொண்டிருக்கும் தேர்தல்களில் ஒன்றாக சிறிலங்கா தேர்தல் அமைந்துள்ள அதேவேளை,  தமிழ் மக்களின் நலன்களை வெற்றி கொள்வதற்கான தேர்தலாகவும் இது அமைந்துள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருமலை மாவட்ட வேட்பாளரும் அரசியல் ஆய்வாளருமான யதீந்திரா தெரிவித்துள்ளார்.

கிணறு வெட்டக் கிளம்பியது பூதம் – பிரபாகரனின் பிராடோ வாகனத்தை பயன்படுத்திய படை அதிகாரி

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் பயன்படுத்திய புத்தம்புதிய பிராடோ வாகனத்தை, சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவர் பயன்படுத்திய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

மகிந்தவின் தேர்தல் பணியகத்தில் நுழைந்த அரச புலனாய்வு அதிகாரி கைது

குருநாகலவில் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் பிரதான தேர்தல் பணியகத்தில் ஆயுதம் தாங்கிய ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.