மேலும்

27 அமைச்சர்கள் இன்று பதவியேற்பர்?

சிறிலங்காவின் புதிய அமைச்சரவையில் இடம்பெறும் 27 அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிபர் செயலகத்தில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்பாக இந்த பதவியேற்பு நிகழ்வு இடம்பெறும்.

நிஷா பிஸ்வாலுடன் சிறிலங்கா வருகிறார் ரொம் மாலினோவ்ஸ்கி

இரண்டு நாள் பயணமாக இன்று சிறிலங்கா வரவுள்ள தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வாலுடன், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மற்றொரு மூத்த அதிகாரியும் கொழும்பு வரவுள்ளார்.

ஐ.நா அறிக்கை குறித்து சிறிலங்காவுடன் முக்கிய பேச்சு நடத்துகிறார் நிஷா பிஸ்வால்

ஒரு நாள் பயணமாக நாளை சிறிலங்கா வரவுள்ள அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால், ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணை அறிக்கை தொடர்பாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் பேச்சு நடத்துவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சங்ககாரவுக்கு பிரித்தானியாவுக்கான தூதுவர் பதவி

அனைத்துலகத் துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்து இன்றுடன் ஓய்வு பெற்றுள்ள சிறிலங்கா அணியின் வீரர், குமார் சங்ககாரவுக்கு பிரித்தானியாவுக்கான தூதுவர் பதவியை வழங்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்வந்துள்ளார்.

பிரகீத் கடத்தல் குறித்து 4 இராணுவ அதிகாரிகள் கைது

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இன்று காலை தொடக்கம் விசாரிக்கப்பட்டு வந்த நான்கு இராணுவ அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

மகிந்தவின் தவறான கணிப்புகள் – ‘தி எக்கொனமிஸ்ட்’

சிறிலங்காவில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின் உச்சக்கட்டமாக நடைபேசியில் எடுக்கப்பட்ட காணொலி ஒன்று பரவவிடப்பட்டிருந்தது.

மூன்று அமைச்சர்கள் மட்டும் அவசரமாக பதவியேற்றனர்

சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தின் மூன்று அமைச்சர்கள் மட்டும் இன்று அதிபர் செயலகத்தில் நடந்த நிகழ்வில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்பாக அவசரமாகப் பதவியேற்றுள்ளனர்.

கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் விபரம் அறிவிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியுற்ற துரைரட்ணசிங்கம் மற்றும் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியுற்ற சாந்தி சிறீஸ்கந்தராஜா ஆகியோரே தேசியப் பட்டியல் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு எஸ்.பி.திசநாயக்க – மகிந்த அணியை பலவீனப்படுத்த திட்டம்

சிறிலங்காவின் புதிய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசநாயக்க நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை நாளை மைத்திரியிடம் கையளிப்பு?

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் போர்க்குற்ற அறிக்கையின் பிரதி சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் இந்தவார முற்பகுதியில் கையளிக்கப்படும் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.