மேலும்

சிறிலங்காவைக் கண்காணிக்க 337,800 டொலர் நிதி கோருகிறது ஜெனிவா பணியகம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா தலைமையிலான நாடுகள் சமர்ப்பித்துள்ள சிறிலங்கா தொடர்பான தீர்மான வரைவை நடைமுறைப்படுத்துவதற்கும், மீளாய்வுகள், கண்காணிப்புகளை மேற்கொள்வதற்கும், 337,800 டொலர் நிதி தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

நம்பகமான விசாரணைக்கு சிறிலங்காவின் சட்டங்கள் போதுமானதல்ல – ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

சிறிலங்காவின் குற்றவியல் சட்டமுறைமை சுதந்திரமான மற்றும் நம்பகமான விசாரணைகளை முன்னெடுப்பதற்குப் போதுமானதாக இல்லை என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட்  ராட் அல் ஹுசேன் தெரிவித்தார்.

ஜெனிவாவில் மெளனமான இந்தியா, சீனா – சிறிலங்காவுக்கு ஆதரவுக்குரல் கொடுத்த பாகிஸ்தான்

சிறிலங்கா தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின்  விசாரணை அறிக்கை தொடர்பான நேற்றைய  விவாதத்தில், இந்தியா, சீனா, கியூபா ஆகிய நாடுகள் கருத்து எதையும் வெளியிடவில்லை.

தீர்மான வரைவின் சில பலவீனங்கள் முழுமையான தோல்வியை ஏற்படுத்தி விடும் – முதலமைச்சர்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவில் உள்ள சில பலவீனங்கள் முழுமையான செயற்பாடுகளையும் தோல்வியடையச் செய்து விடும் என்று, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

பரணகம ஆணைக்குழுவை கலைக்க வேண்டும் – ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பரிந்துரை

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவினால் அமைக்கப்பட்ட, மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான – காணாமற்போனோர் குறித்து விசாரிப்பதற்கான அதிபர் ஆணைக்குழு மீது நம்பிக்கையில்லை என்றும்  அதனைக் கலைக்க வேண்டும் என்றும் சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரியுள்ளார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன்.

ஜெனிவாவில் நேற்று நிறைவேற்றப்படவில்லை சிறிலங்கா குறித்த தீர்மானம் – இன்றே விவாதம்

சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகளை ஊக்குவித்தல் தொடர்பாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானம் இன்று நிறைவேற்றப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெனிவாவில் தொடங்கியது சிறிலங்கா குறித்த விவாதம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலை குறித்த விவாதம் சற்று  நேரத்துக்கு முன்னர் ஆரம்பமாகியது.

ஐ.நா தீர்மானம் சிறிலங்காவில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்காமல் போகலாம்

அனைத்துலக விசாரணையின் மூலம் மட்டுமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பது உறுதி செய்யப்படும் எனவும் அமெரிக்கா  வலியுறுத்தியது. ஆனால் தற்போது அமெரிக்கா தனது இந்த நிலைப்பாட்டிலிருந்து சடுதியாக மாறியுள்ளது.

சந்திரிகா படுகொலை முயற்சி வழக்கில் இருவருக்கு 300 ஆண்டுகள் சிறைத்தண்டனை

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தி படுகொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில், இரண்டு பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம், 300 ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது.

இந்தியாவின் பங்களிப்பின்றி எந்த மாற்றமும் ஏற்படாது – செல்வம் அடைக்கலநாதன்

இன்றைய சூழலில் இந்தியாவின் காத்திரமான தலையீடின்றி எந்தவொரு ஆக்கபூர்வமான மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்பதே தமது அமைப்பின் நிலைப்பாடு என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.