மேலும்

ஜெனிவா தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்க முண்டியடிக்கும் நாடுகள்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு நேற்று வரை 38 நாடுகள் இணை அனுசரணை வழங்கியுள்ளன.

மகிந்தவைக் காப்பாற்றிவிட்டோம், படையினருக்கும் துரோகம் செய்யமாட்டோம் – ரணில் கூறுகிறார்

மகிந்த ராஜபக்சவை தூக்குக்கயிறில் இருந்து நாமே காப்பாற்றி விட்டோம், எந்தச் சந்தர்ப்பத்திலும் படையினருக்குத் துரோகம் இழைக்கமாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

மின்சார நாற்காலிக்கும் கலப்பு விசாரணைக்கும் முற்றுப்புள்ளி வைத்து விட்டோம் – சிறிலங்கா அதிபர்

மின்சாரக் நாற்காலிக்கும் கலப்பு விசாரணைக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகவும், ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் உள்ளடங்கியுள்ள  உள்ளக விசாரணைப்  பொறிமுறை தொடர்பாக விரைவில் அனைத்துக் கட்சி மாநாட்டை கூட்டி கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

போர்க்குற்ற விசாரணையை உள்ளகப் பொறிமுறையே நடத்துமாம் – சிறிலங்கா அதிபர் கூறுகிறார்

போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்துவது உள்நாட்டு பொறிமுறையாகவே இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

சிறிலங்காவுக்கு இது வரலாற்றுச் சந்தர்ப்பம் – ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம்

போரின் போதும், போருக்குப் பின்னரும், மோசமான மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பதிலளிப்பதற்கு, சிறிலங்காவுக்கு ஒரு வரலாற்றுச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் பேச்சாளர் ரவினா சம்தாசனி தெரிவித்துள்ளார்.

தீர்மானத்தை வலுவிழக்கச் செய்ய கடைசி நேரத்தில் சமந்தா பவரின் காலைப் பிடித்தார் மங்கள?

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவரை சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

விசாரணை நம்பகமானதாக இருப்பதற்கு வெளிநாட்டு நீதிபதிகள் முக்கியம் – சில்வியா கார்ட்ரைட்

சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் போர்க்குற்ற விசாரணைகளில், வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்க வேண்டியது தவிர்க்க முடியாதது என்று தெரிவித்துள்ளார் நியூசிலாந்தின் நீதிபதியான சில்வியா கார்ட்ரைட்.

ஜெனிவாவில் திருத்தங்களின்றி- வாக்கெடுப்பின்றி நிறைவேறியது தீர்மானம்

சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைப்பில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா தலைமையிலான நாடுகளால் முன்வைக்கப்பட்ட தீர்மானம், சற்று முன்னர் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஜெனிவாவில் தொடங்கியது சிறிலங்கா குறித்த தீர்மான வரைவு மீதான விவாதம் – நேரலைப் பதிவு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்கா தொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவு மீதான விவாதம் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.

அனைத்துலக நீதிபதியை கொழும்புக்கு அனுப்புகிறது ஜப்பான்

சிறிலங்காவின் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைகள் குறித்து கவனிக்க, அனைத்துலக நீதிபதி ஒருவரை ஜப்பான் இந்தமாதம் கொழும்புக்கு அனுப்பவுள்ளது.