மேலும்

வெளிநாடுகளுக்கு செல்லும் சிறிலங்கா காவல்துறையினருக்கு வருகை நுழைவிசைவு

வெளிநாடுகளுக்கு அதிகாரபூர்வ பயணங்களை மேற்கொள்ளும் சிறிலங்கா காவல்துறையினருக்கு, அந்தந்த நாடுகளில் வருகை நுழைவிசைவை வழங்கும் வகையில், அனைத்துலக காவல்துறையுடன், சிறிலங்கா காவல்துறை புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றைச் செய்து கொள்ளவுள்ளது.

ரவிராஜ் படுகொலை தொடர்பாக ஆறு பேர் மீது குற்றப்பத்திரம் தாக்கல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பாக, ஆறு பேர் மீது சிறிலங்கா காவல்துறையின் குற்றப்புலனாய்வுப் பிரிவு, நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

படகு வெடிப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மாலைதீவு இளைஞரை நாடுகடத்தியது சிறிலங்கா

மாலைதீவு அதிபர் பயணம் செய்த படகில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் தேடப்பட்டு வந்தவரை, சிறிலங்கா அரசாங்கம் கொழும்பில் கைது செய்து, மாலைதீவுக்கு நாடு கடத்தியுள்ளது.

பசிலின் மனைவியும் விசாரணை வளையத்துக்குள் சிக்குகிறார்

சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் மனைவி புஷ்பா ராஜபக்ச தலைமை தாங்கிய புஷ்பா ராஜபக்ச பவுண்டேசன் நிறுவனத்துக்கு, 3.5 மில்லியன் ரூபாவை அமைச்சரவையின் ஒப்புதல் இன்றி அரச வங்கி ஒன்று மாற்றியது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அரசியல் கைதிகள் விவகாரம் – மைத்திரி, ரணில், சந்திரிகாவைச் சந்திக்கப் போகிறதாம் கூட்டமைப்பு

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர்  ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க ஆகியோருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தவாரம் பேச்சு நடத்தவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர்  மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

மைத்திரி, ரணிலுக்கு உயர்நீதிமன்றம் அழைப்பாணை

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சட்டரீதியாக வழக்குத் தொடுக்க முடியும் என்று, அறிவித்துள்ள சிறிலங்காவின் பிரதம நீதியரசர் கே.சிறிபவன், அவர் உள்ளிட்ட 75 பேரை அடுத்தமாதம் 15ஆம் நாள் உயர் நீதிமன்றில் முன்னிலையாகவும் பணித்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தல் குறித்து ஆராய கொழும்பில் கூடுகிறது கூட்டமைப்பு

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை எதிர்கொள்வதற்கான பரப்புரை உத்திகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடுத்தவாரம் கொழும்பில் கலந்துரையாடவுள்ளது.

கொள்ளையர்களிடம் உடமைகளைப் பறிகொடுத்த சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி

சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதியும், முன்னாள் கூட்டுப் படைகளின் தளபதியுமான, ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய, பிரேசிலில் கொள்ளையர்களிடம் சிக்கி தனது உடமைகளை இழந்துள்ளார்.

முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்

வடக்கில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதைக் கண்டித்தும், வடக்கு மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படாவிட்டால், தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டதாக, உலகம் தீவிரமாக கருத்தில் எடுத்துக் கொள்ளாது என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

போர்க்குற்ற விசாரணை குறித்து சிறிலங்கா அதிபருடன் கோத்தா பேச்சு

போர்க்குற்ற விசாரணை தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச பேச்சுக்களை நடத்தியுள்ளதாக, பல்வேறு தகவல் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.