மேலும்

மாலைதீவில் பிடிபட்டசினைப்பர் வீரர் சிறிலங்கா இராணுவத்தில் பணியாற்றவில்லையாம்

மாலைதீவில் கைது செய்யப்பட்டதாக கூறப்படும், சினைப்பர் அணி சிப்பாய் சிறிலங்கா இராணுவத்தில் பணியாற்றியவர் அல்ல என்று, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

மிதக்கும் ஆயுதக் களஞ்சிய விவகாரம் – சிறிலங்கா அமைச்சரவைக்குள் பிளவு, கடும் வாக்குவாதம்

அவன்ட் கார்ட் நிறுவனத்தின் மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பனவும், நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவும் நாடாளுமன்றத்தில் வெளியிட்ட கருத்துக்கள், சிறிலங்கா அரசாங்கத்துக்குள் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

மாலைதீவில் சினைப்பர் அணி சிப்பாய் கைது – மூடி மறைக்கும் சிறிலங்கா

சிறிலங்கா இராணுவத்தின் சினைப்பர் தாக்குதல் அணியைச் சேர்ந்த முன்னாள் சிப்பாய் ஒருவர், மாலைதீவில் கைது செய்யப்பட்டது தொடர்பான, தெளிவான தகவல்களை வெளியிட, சிறிலங்கா அரசாங்க, மற்றும் இராணுவத் தரப்பு மறுத்துள்ளது.

அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு குறித்து விரைவில் முடிவு – கூட்டமைப்பிடம் மைத்திரி உறுதி

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிப்பது தொடர்பாக விரைவில் உறுதியான முடிவு அறிவிக்கப்படும் என்றும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

62 அரசியல் கைதிகளை இரண்டு கட்டங்களை விடுவிக்க உயர்மட்டக் கூட்டத்தில் முடிவு

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, தமிழ் அரசியல் கைதிகளில் 62 பேரை இரண்டு கட்டங்களாக பிணையில் விடுவிப்பதற்கு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று நடந்த உயர்மட்டக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பிள்ளையான் மீதான விசாரணை திசை திருப்பப்படுகிறதா?

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும், வாகனம் என்பன மறைத்து வைக்கப்பட்டுள்ள இடம் தொடர்பாக, பிள்ளையானிடம் விசாரணை செய்து வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்கா இராணுவத்தின் சினைப்பர் அணியின் முன்னாள் சிப்பாய் மாலைதீவில் கைது

சிறிலங்கா இராணுவத்தில் சினைப்பர் தாக்குதல் அணியில் இருந்த, முன்னாள் இராணுவச் சிப்பாய் ஒருவர் மாலைதீவில் கைது செய்யப்பட்டுள்ளார். மாலைதீவில் உள்ள ஹிபிஹாட்டூ தீவில் பெருமளவு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நோர்வேயில் குணா. கவியழகனின் ‘விடமேறிய கனவு’ அறிமுக அரங்கு

“நஞ்சுண்டகாடு” குணா கவியழகனின் இரண்டாவது நாவலான ‘விடமேறிய கனவு’ அறிமுக அரங்கு நோர்வே தலைநகர்  ஒஸ்லோவில் நடைபெறவுள்ளது.

பேர்ண் மாநகரில் சிறந்த மாணவராக ஈழத்தமிழ் மாணவன் தெரிவு

சுவிற்சர்லாந்தின் தலைநகர் பேர்ணில் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களில், இந்த ஆண்டின் சிறந்த மாணவராக, ஈழத்தமிழ் மாணவனான அருளானந்தம் மரிய அனோஜ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் மீது தாக்குதல்

இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், சென்னையில் நேற்றிரவு தமிழ் இளைஞர் ஒருவரால் தாக்கப்பட்டார்.