மேலும்

இந்தியத் தளபதி சிறிலங்காவில் இருக்கும் போது பாகிஸ்தான் போர்க்கப்பலும் கொழும்பு வருகிறது

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக் சிறிலங்காவில் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையில், பாகிஸ்தானின் பாரிய போர்க்கப்பல் ஒன்றும் இன்று கொழும்புக்கு வரவுள்ளது.

வடக்கிற்குச் செல்வதற்கு இந்திய இராணுவத் தளபதி ஆர்வம்

சிறிலங்காவுக்கான ஐந்து நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக், வடக்கிலுள்ள படைத்தளங்கள் மற்றும், சிறிலங்கா இராணுவப் பயிற்சித் தளங்களுக்குச் செல்வதில் தீவிர ஆர்வம் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறையில் கவனம் செலுத்த கொழும்பு வருகிறார் டேவிட் கமரூன்

பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.

இறுதிப்போரை வழிநடத்திய போர்க்குற்றவாளிகள் மைத்திரியுடன் இரகசிய சந்திப்பு

போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளவர்கள் அடங்கடலான- இறுதிக்கட்டப் போரில் முக்கிய பங்காற்றிய சிறிலங்கா இராணுவத்தின் மூத்த அதிகாரிகள் குழுவொன்று, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது.

சிறிலங்காவுக்கு படையெடுக்கவுள்ள ஐ.நா உயர்மட்டம் – பான் கீ மூன், அல் ஹுசேன் பெப்ரவரியில் வருவர்

ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூன் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் உள்ளிட்டோரைக் கொண்ட ஐ.நாவின் உயர்மட்டக் குழுக்கள் அடுத்த ஆண்டு துவக்கத்தில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளன.

புலிகளுடன் போரிட்ட முல்லைத்தீவுக்குச் செல்கிறார் இந்திய இராணுவத் தளபதி

சிறிலங்காவுக்கு இன்று பயணத்தை மேற்கொள்ளும் இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக், முல்லைத்தீவு உள்ளிட்ட வடக்கின் சில பகுதிகளுக்கும் செல்லவுள்ளார்.

போர்க்குற்றவாளியை இராணுவத் தளபதியாக நியமிக்கிறது சி்றிலங்கா?

போர்க்குற்றம்சாட்டை எதிர்கொண்டுள்ள மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் சிறிலங்காவின் அடுத்த இராணுவத் தளபதியாக நியமிக்கப்படவுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகிந்தவின் ஆணிவேரை அசைத்த சமந்தா பவர் – உபுல் ஜோசப் பெர்னான்டோ

இந்த நான்கு பெண்களிலும் மகிந்த ராஜபக்சவால் அதிகம் வெறுக்கப்பட்டவர் சமந்தா பவர் ஆவார். ‘வெள்ளைமாளிகையில் உள்ள மெல்லிய அந்தப் பெண்மணியே எனது எல்லாப் பிரச்சினைகளுக்கும் மூலகாரணம்’ என மகிந்த ராஜபக்ச தனது அமைச்சர்களைச் சந்திக்கும் போது அடிக்கடி கூறுவார்.

மைத்திரி- கமரூன் சந்தித்துப் பேச்சு – 6.6 மில்லியன் பவுண்ட் நிதியுதவி வழங்க இணக்கம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ள பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன், போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புனர்வாழ்வுப் பணிகளுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு 6.6 மில்லியன் பவுண்டுகளை (சுமார் 1450 மில்லியன் ரூபா) வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

வெளியே போகிறார் கமலேஷ் சர்மா – கொமன்வெல்த் புதிய செயலராகிறார் பற்றீசியா

கொமன்வெல்த் அமைப்பின் புதிய பொதுச்செயலராக, பரோனெஸ் பற்றீசியா ஸ்கொட்லன்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் கொமன்வெல்த் அமைப்பின் பொதுச் செயலர் பதவியை அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் நாள் பொறுப்பேற்கவுள்ளார்.