மேலும்

13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோருகிறது கூட்டமைப்பு

13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கிளிநொச்சியில் கொட்டும் பெருமழை – நள்ளிரவில் வீடுகளுக்குள் வெள்ளம்

தொடர்ந்து கொட்டி வரும் பெருமழையினால் கிளிநொச்சி மாவட்டத்தின் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரகீத் கடத்தலுடன் தொடர்புடைய மேஜர் உள்ளிட்ட மேலும் இரு புலனாய்வு அதிகாரிகள் கைது

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்டது தொடர்பாக சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மேஜர் ஒருவர் உள்ளிட்ட மேலும் இரண்டு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கில் காடுகள் அழிப்பை ஆராய அதிகாரிகள் குழு – சிறிலங்கா அதிபர் அனுப்புகிறார்

வடக்கில் நடந்து வரும் சட்டவிரோத காடழிப்பு, மணல் அகழ்வு மற்றும், மீள்குடியேற்றம் தொடர்பாக நேரடியாகஆராய அதிகாரிகள் கொண்ட குழுவொன்று அமைக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

திருகோணமலைக் கடலில் கடற்படை, விமானப்படை தொடர்ந்து தேடுதல்

திருகோணமலைக் கடலில் மோசமான காலநிலைக்கும் மத்தியில் சிறிலங்கா கடற்படையும், விமானப்படையும் சடலங்களைத் தேடும் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.

சென்னைக்கான விமான சேவையை இன்று மீண்டும் ஆரம்பிக்கிறது சிறிலங்கன் எயர்லைன்ஸ்

சென்னைக்கும் கொழும்புக்கும் இடையிலான விமான சேவைகள் ஒரு வாரத்துக்குப் பின்னர் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறிலங்கன் விமான சேவை அறிவித்துள்ளது.

திடீரென சீனா சென்ற கோத்தா – மகிந்தவும் செல்லத் திட்டம்

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச சீனாவுக்குத் திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டு திரும்பியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரகீத் கடத்தலுடன் தொடர்புடைய இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் இன்று ஹோமகம நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

பல்கலைக்கழக, உயர்வகுப்பு மாணவர்களுக்கு எச்ஐவி பரிசோதனை

பல்கலைக்கழக மற்றும் க.பொ.த உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு எச்.ஐ.வி உள்ளிட்ட தொற்றுநோய் தொடர்பான பரிசோதனைகள் நடத்தப்படும் என்று சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பொறுப்புக்கூறல்: சிறிலங்கா படைகளுடன் இணைந்து செயற்பட பிரித்தானியா முடிவு

சிறிலங்கா தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கிய பிரித்தானியா, பொறுப்புக்கூறல் விவகாரங்கள் தொடர்பாக சிறிலங்கா படைகளுடன் இணைந்து செயற்படவுள்ளது.