மேலும்

பிரிவு: செய்திகள்

மூத்த இராஜதந்திரியைக் கொழும்புக்கு அனுப்புகிறது இந்தியா

ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் இனப்பிரச்சினைத் தீர்வு விடயங்கள் தொடர்பாக, ஆராய்வதற்கும் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் பேச்சுக்களை நடத்துவதற்கும், மூத்த இராஜதந்திரி ஒருவரை சிறிலங்காவுக்கு அனுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காணிகள் ஒப்படைப்பு, மீள்குடியேற்றம் குறித்து ஆராய பொங்கல் நாளன்று பலாலியில் முக்கிய கூட்டம்

யாழ்.மாவட்டத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீள்குடியேற்றம் செய்வது மற்றும், படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை மீளக்கையளிப்பது குறித்து ஆராயும் முக்கியகூட்டம், எதிர்வரும் தைப்பொங்கல் நாளன்று பலாலிப் படைத்தளத்தில் சிறிலங்கா அதிபர் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந்திய வெளிவிவகாரச் செயலர் அடுத்தவாரம் கொழும்பு வருகிறார்

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று சிறிலங்காவுக்கு இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில், இந்திய வெளிவிவகாரச்  செயலர் எஸ்.ஜெய்சங்கர் அடுத்தவாரம் கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

மகிந்த தலைகீழாகத் தொங்கியது ஏன்? – உபுல் ஜோசப் பெர்னான்டோ

70 வயதான தனது தகப்பனார் தற்போதும் மிகவும் பலமாக உள்ளார் என்பதை காண்பிப்பதற்காகவே மகிந்த தலைகீழாக நிற்கும் இந்த ஒளிப்படத்தை நாமல் ராஜபக்ச, தனது முகப்புத்தகத்தில் பதிவேற்றியிருந்தார்.

பிரித்தானிய வெளிவிவகார இணை அமைச்சர் சிறிலங்கா வருகிறார்

பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வைர், அடுத்த வாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

போர் விமானக் கொள்வனவு குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை – சிறிலங்கா விமானப்படை

சிறிலங்கா விமானப்படைக்கு போர் விமானங்களைக் கொள்வனவு செய்வது தொடர்பான எந்த முடிவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்று சிறிலங்கா விமானப்படை பேச்சாளர் குறூப் கப்டன் சந்திம அல்விஸ் தெரிவித்துள்ளார்.

ஆறு மாதகால பதவிநீடிப்புக் கேட்கிறது பரணகம ஆணைக்குழு

காணாமற்போனோர் தொடர்பான விசாரணைகளை நடத்தும், அதிபர் ஆணைக்குழுவின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடையவுள்ள நிலையில், மேலும் ஆறு மாதகால பதவி நீடிப்பைக் கோரவுள்ளது.

சீனாவுடன் உறவை வலுப்படுத்த சீறிலங்கா விருப்பம் – பீஜிங் செல்கிறார் ரணில்

சீனாவுடன் வலுவான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள சிறிலங்கா விரும்புவதாகவும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான உயர்மட்டக்குழு இந்த ஆண்டு பீஜீங் செல்லவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செல்வம் அடைக்கலநாதனுக்கு மாரடைப்பு – சிறி ஜெயவர்த்தனபுர மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

தமிழ் தேசியக் கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், இன்று அதிகாலையில் மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, சிறிஜெயவர்த்தனபுர மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்கவும் சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வு

சிறிலங்கா இராணுவத்தின் ஆட்டிலறிப் படைப்பிரிவின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க நேற்றுடன் ஓய்வு பெற்றிருக்கிறார்.