மேலும்

பிரிவு: செய்திகள்

பிரித்தானிய தேர்தல் – உமா குமரன் தோல்வி, ரணில் வெற்றி, யோகலிங்கம் படுதோல்வி

பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட ஈழத் தமிழரான உமா குமரன்,  ஹரோ ஈஸ்ட் தொகுதியில்  கொன்சர்வேட்டிவ்  வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.

புனேயில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட சிறிலங்கா விமானப்படை விமானம்

சிறிலங்கா இராணுவத்தினருக்கான குதிரைகளை, பாகிஸ்தானில் இருந்து ஏற்றி வந்த, சிறிலங்கா விமானப்படையின், சி-130 விமானம், நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை அடுத்து, இந்தியாவின் புனே விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

மன்னார் ஆயரின் உடல்நிலையில் முன்னேற்றம் – தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பு

பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட மன்னார் ஆயர் வண.இராயப்பு யோசெப் ஆண்டகை, தற்போது உடல்நலம் தேறியுள்ளதாக கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி சிறில் டி சில்வா தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் தொழிற்கட்சி முன்னிலை

பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில், முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், இதுவரை வெளியான முடிவுகளில் தொழிற்கட்சி முன்னிலையில் உள்ளது.

மெக்சிகோவில் பணயம் வைக்கப்பட்டிருந்த 5 இலங்கையர்கள் உள்ளிட்ட 103 பேர் மீட்பு

மெக்சிகோவில் ஆட்கடத்தல்காரர்களால் வீடு ஒன்றில் பயணக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த 5 இலங்கையர்கள் உள்ளிட்ட 103 குடியேற்றவாசிகளை மீட்டுள்ளதாக, மெக்சிகோ காவல்துறை தெரிவித்துள்ளது.

அச்சுறுத்திய மகிந்தவை வெளியே போகச்சொன்ன மைத்திரி – அம்பலமாகும் சந்திப்பு இரகசியம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் இனிமேல் சந்திப்பு இடம்பெற வாய்ப்புகள் இல்லை என்று மைத்திரிபால சிறிசேன தரப்பைச் சேர்ந்த தகவல் அறிந்த வட்டாரங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் தெரிவித்துள்ளன.

மகிந்த குடும்பம் சூறையாடிய 18 பில்லியன் டொலர் வெளிநாடுகளில் பதுக்கல் – மங்கள சமரவீர தகவல்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தினரால், சுமார் 18 பில்லியன் டொலர் பணம், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்ச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

கேரளா- சிறிலங்கா இடையே விரைவில் சுற்றுலாப் பயணிகள் கப்பல்சேவை

இந்தியாவின் கேரள மாநிலத்துக்கும், சிறிலங்காவுக்கும் இடையில் சுற்றுலாப் பயணிகள் கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, சிறிலங்கா அமைச்சர் காமினி ஜெயவிக்கிரம பெரேரா தெரிவித்துள்ளார்.

ஊழல் விசாரணைகளை நிறுத்துமாறு மகிந்த விடுத்த கோரிக்கை மைத்திரியால் நிராகரிப்பு

தனது ஆதரவாளர்களுக்கு எதிரான ஊழல் மோசடி விசாரணைகளை நிறுத்துமாறு சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச விடுத்த கோரிக்கையை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நிராகரித்து விட்டதாக சீன செய்தி நிறுவனமான சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.

பசில் ராஜபக்சவுக்கு மீண்டும் விளக்கமறியல் – வெலிக்கடைக்கு அனுப்பினார் நீதிவான்

சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை எதிர்வரும் மே 20ம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க கடுவெல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.