மேலும்

பிரிவு: செய்திகள்

அரசியலமைப்பு சபையாக மாறுகிறது நாடாளுமன்றம் – இன்று காலை சிறப்பு அமர்வு

சிறிலங்கா நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணை இன்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

பிரகீத் கடத்தல் – மேலும் இரு சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் கைதாகின்றனர்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்டது தொடர்பாக மேலும் இரண்டு சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆட்கடத்தல் வழக்கில் ஹிருணிகாவைக் கைது செய்ய சட்டமா அதிபர் உத்தரவு

தெமட்டகொடவில் இளைஞர் ஒருவரைக் கடத்திய சம்பபவம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவைக் கைது செய்ய, குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு சட்டமா அதிபர் பணிப்புரை வழங்கியுள்ளார்.

ராஜபக்சக்களை அரசியலில் இருந்து அகற்ற முடியாது – மார்தட்டுகிறார் பசில்

ஐதேகவினாலோ, சிறிலங்கா சுதந்திரக் கட்சியினாலோ, ராஜபக்‌சக்களை அரசியலிலிருந்து அகற்ற முடியாது என்று, சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ச தெரிவித்துள்ளார். பிபிசி செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

வரலாற்றில் இடம்பிடித்து விட்டார் பிரபாகரன் – கோபாலகிருஷ்ண காந்தி

பிரபாகரன் வரலாற்றில் இடம்பிடித்து விட்டார், அவரது கொள்கைகள் தற்போதைய நிகழ்ச்சி நிரலில் இருந்து வெளியேறிய போதிலும், மறைந்து விடவில்லை என்று முன்னாள் இந்திய இராஜதந்திரியான கோபாலகிருஷ்ணகாந்தி தெரிவித்துள்ளார்.

தன்னைக் கொல்ல முயன்ற முன்னாள் போராளிக்கு ஆசீர்வாதம் அளித்தார் மைத்திரி

தன்னைக் கொல்ல முயன்ற குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினருக்குப் பொதுமன்னிப்பு அளித்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அவரைச் சந்தித்து ஆசியும் வழங்கினார்.

புலம்பெயர் தமிழர்களை வடக்கில் முதலீடு செய்ய அழைக்கிறார் ரணில்

வடக்கை அபிவிருத்தி செய்வதற்கு, புலம்பெயர் தமிழர்கள் அங்கு முதலீடுகளை செய்வதற்கு முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

சிறிலங்காவின் நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்- நோர்வே

சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு நோர்வே முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயாராக இருக்கிறது என்று நோர்வே வெளிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரென்டே தெரிவித்தார்.

கோத்தாவிடம் நேற்று 7 மணிநேரம் விசாரணை – இன்றும் தொடரும்

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவிடம், நேற்று ஏழு மணிநேரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட அதேவேளை,  இன்றும் இந்த விசாரணை தொடரவுள்ளது.

தெல்லிப்பழையில் 984 ஏக்கர் காணிகளை விடுவிக்க சிறிலங்கா அமைச்சரவை ஒப்புதல்

தெல்லிப்பழைப் பகுதியில்,  இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 984 ஏக்கர் காணிகளை விடுவிக்க சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், இதற்கு அமைச்சவையில் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.