மேலும்

பிரிவு: செய்திகள்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 10ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு

திருகோணமலையில் கடந்த 2006ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 10ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நேற்று கல்முனை வை.எம்.சீ.ஏ. மண்டபத்தில் நடைபெற்றது.

இரண்டாம் முள்ளிவாய்க்கால் – பாகம்: 04

‘ஒரு விடுதலைப் போராட்டத்தில்  வெற்றிகளும் தோல்விகளும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களை போன்றவை. விடுதலை என்ற இலக்கை அடையும் வரை இவை இரண்டும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். உண்மையான விடுதலைப் போராளிகள் வெற்றிகளை கண்டு மமதையடையவோ தோல்விகளை கண்டு சோர்ந்து போகவோமாட்டார்கள்’

விமானந்தாங்கி கப்பலை கொழும்புக்கு அனுப்பியது ஏன்? – இந்திய கடற்படை விளக்கம்

சீனப் போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகள் சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணங்களே இந்தியக் கடற்படையின் விமானந்தாங்கிப் போர்க்கப்பலான ஐ.என்எஸ் விக்கிரமாதித்யாவை, கொழும்புத் துறைமுகத்தில் நிறுத்துவதற்கு, தூண்டுதலாக அமைந்தது என்று இந்தியக் கடற்படை தெரிவித்துள்ளது.

நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆவணங்களை வழங்க மறுக்கும் சிறிலங்கா இராணுவம்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போகச் செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகளுக்குத் தேவையான ஆவணங்களை சிறிலங்கா இராணுவம் இன்னமும் சமர்ப்பிக்கவில்லை என்று குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்துக்கு இந்தியாவின் இரண்டு நிபந்தனைகள்

கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை தொடர்வதற்கு அனுமதி அளிக்க சிறிலங்கா அரசாங்கத்திடம் இந்தியா இரண்டு நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வடக்கில் தேசிய பாதுகாப்பு நலனுக்குத் தேவையான காணிகள் விடுவிக்கப்படாது – பாதுகாப்புச் செயலர்

வடக்கில் சிறிலங்கா படையினரின் வசம் உள்ள தனியார் காணிகளை விடுவிப்பதைத் துரிதப்படுத்துவதற்காக பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தலைமையிலான குழுவொன்றை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.

இரு முக்கிய அனைத்துலக உயர்மட்டப் பிரமுகர்களை எதிர்கொள்ளத் தயாராகிறது சிறிலங்கா

அடுத்தமாதம் முதல் வாரத்தில் இரண்டு அனைத்துலக முக்கிய பிரமுகர்களை எதிர்கொள்வதற்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தயாராகி வருகிறது.

பேரம் பேசலுக்கான பசிலின் புதிய அரசியல் நிகழ்ச்சிநிரல் – உபுல் ஜோசப் பெர்னான்டோ

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெற்றுக்கொள்வதற்கு மகிந்தவுடன் மைத்திரி இணைய வேண்டும் என்கின்ற விடயத்தை தற்போது மைத்திரிக்கு எஸ்.பி எடுத்துக் கூறிவருகிறார். பசிலின் மறைமுக மூலோபாயத்தை எஸ்.பி செயற்படுத்தத் தொடங்கியுள்ளார்.

ஒரே நேரத்தில் இந்தியப் போர்க்கப்பல்களுக்கு வரவேற்பு – சீனப் போர்க்கப்பல்களுடன் பயிற்சி

இந்தியக் கடற்படையின் விமானந்தாங்கிப் போர்க்கப்பலான ஐ.என்எஸ் விக்கிரமாதித்யா, கொழும்புத் துறைமுகத்துக்குள் பிரவேசித்த போது, மேற்கு கடற்பகுதியில் சீனக் கடற்படையின் போர்க்கப்பல்களுடன் சிறிலங்கா கடற்படை போர்ப் பயிற்சி ஒன்றை மேற்கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய விமானந்தாங்கி கப்பலில் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று இந்தியாவின் மிகப் பெரிய விமானந்தாங்கிப் போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்கிரமாதித்யாவைப் பார்வையிட்டார்.