மேலும்

பிரிவு: செய்திகள்

அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிக்குமாறு ஐ.நா கோரமுடியாது – மனித உரிமை ஆணையாளர்

தடுப்புக்காவலில் உள்ள அரசியல் கைதிகளுக்கு, பொதுமன்னிப்பு அளிக்கும்படி ஐ.நாவினால் கோர முடியாது என்றே தாம் குறிப்பிட்டதாக, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

அனைத்துலக நீதிபதிகளின் பங்களிப்புக்கு ஐ.நா அழுத்தம் கொடுக்காது – செயிட் ராட் அல் ஹுசேன்

போர்க்குற்ற விசாரணைகளில், அனைத்துலக நீதிபதிகளின் பங்களிப்பை ஏற்றுக் கொள்ளுமாறு சிறிலங்காவுக்கு ஐ.நா அழுத்தம் கொடுக்காது என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

அனைத்துலக கண்காணிப்புடன் போர்க்குற்ற விசாரணை – வலியுறுத்துகிறார் சரத் பொன்சேகா

சிறிலங்கா மீது சுமத்தப்பட்டிருக்கும் போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக கண்காணிப்பாளர்களின் பங்களிப்புடன், விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார், முன்னாள் இராணுவத் தளபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான  பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

விசாரணைப் பொறிமுறையில் அனைத்துலகப் பங்களிப்பு அவசியம்- ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

சிறிலங்காவின் நீதித்துறை அரசியல் மயப்படுத்தப்பட்டதாக, நம்ப முடியாததாக, நிலையற்றதாக இருப்பதால் தான், போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறையில் அனைத்துலகப் பங்களிப்பு வலியுறுத்தப்பட்டதாக, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரரைப் பிணையில் விடுவித்தது நீதிமன்றம் – ஆனாலும் நாளை வரை விளக்கமறியல்

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொது பலசேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரரை ஹோமகம நீதிமன்றம் இன்று பிணையிில் செல்ல அனுமதித்துள்ளது.

சிறிலங்கா அதிபர், பிரதமரைத் தனித்தனியாகச் சந்தித்தார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் இன்று காலை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆகியோரைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார் சரத் பொன்சேகா

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயக கட்சியின் தலைவருமான,  பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இன்று பிற்பகல் நாடாளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சந்திப்பு

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் இன்று காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

மகிந்த கண்ணீர் சிந்தியது ஏன்?

தான் கட்டியெழுப்பிய குடும்ப ஆட்சி கடந்த ஒராண்டில் நிர்மூலமாக்கப்பட்டதையே மகிந்த ராஜபக்சவின் கண்ணீர் சிந்திய ஒளிப்படம் தெளிவாகக் காண்பிக்கின்றது.

அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு – ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் கருத்துக்கு விளக்கம்

அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்படுவதை விரும்பவில்லை என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் கருத்து வெளியிட்டதாக வெளியான செய்தி தொடர்பாக, ஐ.நா பேச்சாளர் ருபேர்ட் கொல்வில் விளக்கமளித்துள்ளார்.