மேலும்

பிரிவு: செய்திகள்

இணையத்தளங்கள் பதிவு – மகிந்த அரசைப் பின்பற்றுவதாகக் கூறுகிறது மைத்திரி அரசு

ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், செய்தி இணையத்தளங்களைப் பதிவு செய்யுமாறு கோரவில்லை என்று சிறிலங்காவின் பதில் ஊடகத்துறை அமைச்சர் கருணாரத்ன பரணவிதான தெரிவித்துள்ளார்.

அமெரிக்க காங்கிரஸ் வெளிவிவகாரக் குழுத் தலைவருடன் மங்கள சமரவீர பேச்சு

அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அமெரிக்க நாடாளுமன்ற வெளிவிவகாரக் குழுத் தலைவரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

பலாலி விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தை எதிர்க்கவில்லை – என்கிறார் விக்னேஸ்வரன்

பலாலி விமான நிலையத்தை விரிவாக்கும் திட்டத்துக்கு தாம் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்றும், அதற்கு முழுமையாக இணங்குவதாகவும் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க தமிழ்நாடு அரசு முடிவு

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், சிறைத்தண்டனை அனுபவித்து வரும், பேரறிவாளன், சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், நளினி ஆகிய  ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம் – சிறிலங்காவுக்கு சுனாமி ஆபத்து இல்லை

இந்தோனேசியாவின் சுமாத்ரா கடலில் இன்று மாலை ஏற்பட்ட 7.9 அளவுடைய பாரிய நிலநடுக்கத்தினால், சிறிலங்காவில் சுனாமி ஏற்படும் ஆபத்து இல்லை என்று சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

செய்தி இணையத்தளங்களை பதிவு செய்ய சிறிலங்கா அறிவுறுத்தல்- ஊடக சுதந்திரம் கேள்விக்குறி

அனைத்து செய்தி இணையத்தளங்களையும் பதிவு செய்து கொள்ளுமாறு சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காணி அமைச்சு ஜோன் அமரதுங்க வசமானது

சிறிலங்காவின் காணி அமைச்சராக, ஐதேகவைச் சேர்ந்த ஜோன் அமரதுங்க இன்று மதியம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.

சந்திரிகா- சுஸ்மா புதுடெல்லியில் சந்திப்பு

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜை இன்று சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

பாரத லக்ஸ்மன் கொலை சந்தேக நபர் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம்

பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபரான தெமட்டகொட சமிந்த வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்படும் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தார். இன்று பிற்பகல் 4.15 மணியளவில் தெமட்டகொட பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

எட்காவுக்கும் இந்தியாவின் நோயாளர் காவுவண்டிச் சேவைக்கும் தொடர்பில்லை – ஹர்ஷ டி சில்வா

இந்தியாவுடன் செய்து கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள பொருளாதார மற்றும் தொழில்நுட்ப கூட்டு உடன்பாட்டுக்கும் (எட்கா), விரைவில் இந்தியாவினால் தொடங்கப்படவுள்ள நோயாளர் காவு வண்டிச் சேவைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.