மேலும்

பிரிவு: செய்திகள்

ஆண்டொன்று ஆனதே…!

இன்று மார்ச்-08 உலகம் முழுதும் பெண்களைப் போற்றும் நன்னாள் மட்டுமல்ல; ஈழவிடுதலைப் போராட்ட முன்னோடி, கவிஞர், எழுத்தாளர், சமூகப் விடுதலைப் போராளி என்று பல பரிமாணங்களைக் கொண்ட, ‘புதினப்பலகை’ நிறுவக ஆசிரியர் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவு நாளும் கூட.

முல்லைத்தீவில் சிறிலங்கா படைகளுக்கு சிறப்புப் பயிற்சி – தயார் நிலையில் வைத்திருக்க முயற்சி

முல்லைத்தீவு படைகளின் தலைமையகத்தின் கீழ் உள்ள சிறிலங்கா படையினருக்கு சிறப்பு காலாலாற்படை மற்றும் பற்றாலியன் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பிரகீத் கடத்தல் வாக்குமூலம் அளிக்க மறுத்தார் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சாட்சியமளிக்க மறுப்புத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், பிரேசிலுக்கான  சிறிலங்கா தூதுவருமான ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய.

தாய்லாந்து பிரதிப் பிரதமர் தலைமையிலான குழு சிறிலங்கா வருகிறது

தாய்லாந்தின் பிரதிப் பிரதமர் தலைமையிலான அதிகாரபூர்வ குழுவொன்று, பொருளாதார உறவுகளை விரிவுபடுத்தும் நோக்கில் நாளை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

15 மாதங்களாகியும் அதிகாரிகளை விட்டுப்போகாத மகிந்த பக்தி

சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 15 மாதங்களாகின்ற நிலையில், கொழும்பில் இன்று நடந்த நிகழ்வு ஒன்றில் வரவேற்புரை நிகழ்த்திய விவசாய அமைச்சின் செயலாளர், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச என்று விழித்தது நிகழ்வில் பங்கேற்றவர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது.

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நடந்தது என்ன?

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையில், விரைவில் பேச்சுக்கள் இடம்பெறவுள்ளன.

எட்கா உடன்பாடு ரணிலை வீட்டுக்கு அனுப்புமா? – உபுல் ஜோசப் பெர்னான்டோ

உள்நாட்டு யுத்தத்தை முடிவிற்குக் கொண்டு வர இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது என்பதை ஜே.ஆர். புரிந்து கொண்டார். இதனால் இந்தியாவை தனது சூழ்ச்சி வலைக்குள் வீழ்த்துவதென ஜே.ஆர். தீர்மானித்தார். இந்தியாவால் வளர்த்தெடுக்கப்பட்ட புலிகளை இந்தியாவே அழிக்க வேண்டும் என்பதற்காகவே இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.

அரசியலமைப்பு குறித்த மக்கள் கருத்தறியும் குழு சம்பந்தனைச் சந்திக்கிறது

புதிய அரசியலமைப்பு தொடர்பாக மக்களின் கருத்தறிய சிறிலங்கா அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட குழு, நாளை மறுநாள் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் சிறப்பு சந்திப்பொன்றை நடத்தவுள்ளது.

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்கு மாவை, சித்தார்த்தன் வரவில்லை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று கொழும்பில் நடைபெற்றிருந்த நிலையில், இந்தக் கூட்டத்தில், தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனும் பங்கேற்கவில்லை.

உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு தமிழ் அரசியல் கைதிகளிடம் கூட்டமைப்பு கோரிக்கை

மகசின் சிறைச்சாலையில் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உடனடியாக  தமது போராட்டத்தை கைவிட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.