மேலும்

பிரிவு: செய்திகள்

நம்பகமான விசாரணையே எமக்குத் தேவை – ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர்

சிறிலங்காவில் இடம்பெற்ற போருடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பாக நம்பகமான விசாரணைகளையே ஐ.நா வலியுறுத்துவதாக ஐ.நா பொதுச்செயலரின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

பெல்ஜியம் விமான நிலையம், தொடருந்து நிலையத்தில் குண்டுகள் வெடித்து 30 பேர் வரை பலி

பெல்ஜியம் தலைநகர் பிரசெல்சின் சவென்ரெம் அனைத்துலக விமைான நிலையத்திலும், மெட்ரோ தொடருந்து நிலையத்திலும் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 30 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவங்களில் இலங்கையர்களுக்குப் பாதிப்பு ஏற்படவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

முதலமைச்சர்களின் மாநாட்டில் இருந்து நழுவினார் விக்கி

ஹிக்கடுவையில் நேற்று நடந்த மாகாண முதலமைச்சர்களின் 32 ஆவது மாநாட்டில், வடக்கு மாகாண முதலமைச்சர், சி.வி.விக்னேஸ்வரன் பங்கேற்கவில்லை.

நாட்டின் தேசிய பாதுகாப்பு மோசமடைகிறது – கோத்தா குற்றச்சாட்டு

நாட்டின் தேசிய பாதுகாப்பு மோசமடைந்துள்ளதாகவும், யாழ்ப்பாணத்தில் தாம் நிறுத்திய இராணுவப் படைப்பிரிவுகளை, அங்கிருந்து விலக்கும் முயற்சிகள் இடம்பெறுவதாகவும், சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் 18 அகதிகள் தமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்புகின்றனர்

தமிழ்நாட்டில் தங்கியுள்ள மேலும் 18 தமிழ் அகதிகள் வரும் 28ஆம் திகதி சிறிலங்காவுக்கு அழைத்து வரப்படவுள்ளனர். அகதிகளை சுயவிருப்பில் மீளக்குடியமர்த்தும் திட்டத்தின் கீழ், அகதிகளுக்கான ஐ.நா முகவரகம் இவர்களைத் தாயகம் அழைத்து வரும் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

கொழும்பில் அமெரிக்க கடற்படை வாத்திய அணியின் இசை நிகழ்ச்சிகள்

சிறிலங்காவில் பொது இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக அமெரிக்க கடற்படையின் 7ஆவது கப்பற் படையணியின் வாத்திய அணி கொழும்புக்கு வந்துள்ளது.

சிறிலங்காவில் திரவ எரிவாயு மின்உற்பத்தி நிலையம் – உதவத் தயார் என்று கனடா அறிவிப்பு

சிறிலங்காவில் திரவ எரிவாயு மின் உற்பத்தி நிலையம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு, உதவிகளை வழங்குவதற்கு கனடா முன்வந்துள்ளது.

சுதந்திரக் கட்சியில் முக்கிய பொறுப்புக் கேட்கவில்லை – என்கிறார் கோத்தா

சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் தனக்கு பொறுப்பு வாய்ந்த பதவி அளிக்கப்பட வேண்டும் என்று கோரியிருப்பதாக வெளியான செய்திகளை சி்றிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மறுத்துள்ளார்.

மாகாணங்களுடன் அதிகாரங்களைப் பகிரத் தயார்- சிறிலங்கா அதிபர்

ஒன்றுபட்ட சிறிலங்காவுக்குள் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கு தாம் ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளார் சி்றிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன. ஹிக்கடுவவில் இன்று நடந்த முதலமைச்சர்களின் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் வரலாற்று எதிரி இந்தியா – உதய கம்மன்பில

சிறிலங்காவின் வரலாற்று எதிரி நாடான இந்தியாவுடன், எட்கா உடன்பாடு கையெழுத்திடப்பட்டால், இந்தியாவின் ஒரு மாநிலமாகவே சிறிலங்கா மாறிவிடும் என்று எச்சரித்துள்ளார் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில.