மேலும்

பிரிவு: செய்திகள்

இன்று கொழும்பு வருகிறார் கனேடிய வெளிவிவகார அமைச்சர் – சம்பந்தன், விக்னேஸ்வரனை சந்திப்பார்

கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியன், மூன்று நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டு இன்று மாலை கொழும்பு வரவுள்ளார்.

பல்கலைக்கழக மோதல்களில் சம்பந்தப்பட்ட 7 மாணவர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட புகுமுக மாணவர் வரவேற்பின் போது இடம்பெற்ற மோதல்கள் தொடர்பாக ஏழு மாணவர்களுக்கு யாழ். மாவட்ட நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

அம்பாந்தோட்டையில் 15 ஆயிரம் ஏக்கர் காணிகளைக் கேட்கிறது சீனா

அம்பாந்தோட்டையில், சிறப்புப் பொருளாதார வலயத்தை அமைப்பதற்கு 15 ஆயிரம் ஏக்கர் காணியைத் தருமாறு சீனா கோரியுள்ளதாக சிறிலங்காவின் சர்வதேச வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.

காணாமற்போனோரின் நிலை என்ன? – விபரம் வெளியிடக் கோருகிறது சர்வதேச செஞ்சிலுவைக் குழு

காணாமற்போயுள்ள 16 ஆயிரம் பேரின் நிலை என்னவென்று அவர்களி்ன் உறவினர்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்று, அனைத்துலக செஞ்சிலுவைக் குழு தெரிவித்துள்ளது.

பாதயாத்திரை பற்றி வாய்திறக்காத மைத்திரி – மகிந்த அணியினர் ஏமாற்றம்

சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக கூட்டு எதிரணியினர் நாளை மறுநாள் ஆரம்பிக்கவுள்ள பாதயாத்திரை தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எந்தக் கருத்தையும் வெளியிடாதது, மகிந்த ஆதரவு அணியினரை ஏமாற்றமடையச் செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜா-எல வரை விரிவாக்கப்படவுள்ள கொழும்புத் துறைமுகம்

தெற்காசியாவின் மிகப்பெரிய துறைமுகமாக கொழும்புத் துறைமுகம் விரிவாக்கப்படவுள்ளதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அமைப்பாளர் பதவிகள் பறிக்கப்படும் – மகிந்த அணியினருக்கு மைத்திரி எச்சரிக்கை

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலச் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்காத நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து கட்சியின் அமைப்பாளர் பதவிகள் பறிக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார்.

தமிழர்களுக்குத் தனிநாடு தேவையில்லை – என்கிறார் மனோ கணேசன்

தமிழர்களுக்குத் தனிநாடு தேவையில்லை என்று சிறிலங்காவின் தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஹாலி-எலவில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

யாழ். பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகள் ஆரம்பம் – சிங்கள மாணவர்கள் வரவில்லை

யாழ். பல்கலைக்கழகத்தின் பெரும்பாலான பீடங்களின் கல்விச் செயற்பாடுகள் நேற்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சிங்கள மாணவர்கள் விரிவுரைகளுக்கு வரவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் – சிறிலங்காவுக்கு இந்தியா எச்சரிக்கை

கொழும்பில் உள்ள ஐ.நா பணியகம் முன்பாக கடந்த வியாழக்கிழமை பாகிஸ்தான் தூதரகத்தின் ஏற்பாட்டில்,  காஷ்மீர் தொடர்பாக இந்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டமை தொடர்பாக, சிறிலங்காவிடம் இந்தியா அதிகாரபூர்வமற்ற வகையில் கவலை தெரிவித்துள்ளது.