மேலும்

பிரிவு: செய்திகள்

புனேயில் கைதான யாழ். இளைஞர் கொழும்புக்கு நாடு கடத்தப்பட்டார்

போலி இந்தியக் கடவுச்சீட்டு மூலம் ஜேர்மனிக்குச் செல்ல முயன்ற போது, புனே, லொஹேகான் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சுதன் சுப்பையா என்ற தமிழர், கொழும்புக்கு நாடுகடத்தப்பட்டார்.

உள்ளூராட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி – உறுதிப்படுத்தினார் மகிந்த

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கூட்டு எதிரணி தனித்துப் போட்டியிடும் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச உறுதிப்படுத்தியுள்ளார்.

அடுத்தவாரம் தொடங்குகிறது ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 33 ஆவது கூட்டத்தொடர்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 33 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 13ஆம் நாள், தொடங்கி 30 ஆம் நாள் வரை ஜெனிவாவில் இடம்பெறவுள்ளது.

26 முன்னாள் போராளிகளுக்கு முதற்கட்டமாக விச ஊசி மருத்துவ பரிசோதனை

முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வின் போது, விசஊசி ஏற்றப்பட்டதா என்பதை ஆய்வு செய்வதற்காக, நடத்தப்பட்ட முதற்கட்ட பரிசோதனைகளில், 26 முன்னாள் போராளிகள் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறிலங்கா தூதுவரைத் தாக்கிய மேலும் நான்கு பேரைத் தேடுகிறது மலேசிய காவல்துறை

மலேசியாவுக்கான சிறிலங்கா தூதுவர் இப்ராகிம் அன்சார் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் மேலும் நான்கு பேரைத் தேடி வருவதாக மலேசிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

துமிந்த சில்வா உள்ளிட்ட ஐவருக்கு மரணதண்டனை – பாரத லக்ஸ்மன் கொலை வழக்கில் தீர்ப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட ஐந்து பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் இந்தியர்களைப் பின்தள்ளும் சீனர்கள்

சிறிலங்காவின் சுற்றுலாப் பயணிகள் சந்தையில் தொடர்ந்து இரண்டாவது மாதமாக இந்தியர்களை பின்னுக்குத் தள்ளிக் கொண்டு, சீனர்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.

பலாலி விமான நிலையம்: இந்தியாவுடன் உடன்பாடு செய்யவில்லை – சிறிலங்கா பிரதமர்

பலாலி விமான நிலையத்தை நவீனமயப்படுத்தி விரிவாக்கம் செய்வது தொடர்பாக இந்தியாவுடனோ, இந்திய நிறுவனத்துடனோ, சிறிலங்கா அரசாங்கம் எந்த உடன்பாட்டையும் செய்து கொள்ளவில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு மே மாதம் சிறிலங்கா வருகிறார் நரேந்திர மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த ஆண்டு மே மாதம் சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

பிரபாகரனுடன் நடத்திய 45 நிமிட இறுதிச்சண்டை – விபரிக்கிறார் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன

போரின் இறுதிக்கட்டத்தில் நடந்த 45 நிமிடச் சண்டையிலேயே, விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டார் என்றும், அதற்கு முதல் நாள் நடந்த சண்டையில், புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டம்மானும் கொல்லப்பட்டார் என்றும், மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.