மேலும்

பிரிவு: செய்திகள்

சிறிலங்கா விமானப்படைத் தளபதியாக எயர் மார்ஷல் கபில ஜெயம்பதி நியமனம்

சிறிலங்கா விமானப்படையின் புதிய தளபதியாக, எயர் வைஸ் மார்ஷல் கபில ஜெயம்பதி நியமிக்கப்பட்டுள்ளார். இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

4419 ஏக்கரில் ஒரு அங்குல நிலமும் விடுவிக்கப்படாது – யாழ். படைகளின் தளபதி

யாழ்ப்பாணத்திலும் பலாலி இராணுவ கன்டோன்மென்ட் பிரதேசத்திலும், இராணுவத்தினரிடம் உள்ள 4419 ஏக்கர் காணிகளில் ஒரு அங்குலமேனும் திருப்பிக் கொடுக்கப்படமாட்டாது என்று யாழ். படைகளின் கட்டளைத் தளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

அணிசேரா நாடுகளின் மாநாட்டில் மைத்திரியின் பிரதிநிதியாக மகிந்த

அணிசேரா நாடுகளின் அமைப்பின் 17ஆவது உச்சி மாநாட்டில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பிரதிநிதியாக, சிறிலங்கா குழுவுக்கு அமைச்சர் மகிந்த சமரசிங்கவே தலைமை தாங்கவுள்ளார்.

மேஜர் ஜெனரல் சுமேத பெரேராவுக்கு அமெரிக்காவில் நியமனம்

நியூயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் பணியகத்துக்கான புதிய இராணுவ இணைப்பதிகாரியாக மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

வடக்கு அதிவேக நெடுஞ்சாலை திருகோணமலை வரை நீடிப்பு

கேந்திர முக்கியத்துவம்மிக்க துறைமுக நகரான திருகோணமலையை அபிவிருத்தி செய்யும் நோக்கில், வடக்கு அதிவேக நெடுஞ்சாலை திருகோணமலை வரை நீடிக்கப்படவுள்ளதாக, நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

வலி.வடக்கில் 1000 ஏக்கர் காணிகளைக் கோருகிறது சிறிலங்கா இராணுவம்

தேசிய பாதுகாப்புத் தேவைகளுக்காக வலிகாமம் வடக்கில் 1000 ஏக்கர் காணிகளை வைத்திருப்பதற்கு அனுமதி அளிக்குமாறு காணி ஆணையாளரிடம் சிறிலங்கா இராணுவம் கோரியுள்ளது. யாழ். மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

கெரில்லா போர்முறையில் இருந்து விலகியதே பிரபாகரன் செய்த தவறு – மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன

பிரபாகரன் கெரில்லா போர் முறைமையிலிருந்து மாறவிரும்பிய அதேவேளை, நாங்கள் மரபுசார் போரியலிலிருந்து எம்மை விலக்கிக் கொள்ள முயற்சித்தோம் என்று மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்தார். டெய்லி பினான்சியல் ரைம்ஸ்சுக்கு அளித்திருந்த  அவரது செவ்வியின் இரண்டாவது பகுதி- 

மோதலுக்கான காரணிகளுக்குத் தீர்வு காணத் தவறியுள்ளது சிறிலங்கா- மங்கள சமரவீர

மோதல்களுக்கான காரணிகளுக்கு தீர்வு காண சிறிலங்கா தவறியுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

போர்க்குற்ற விசாரணைக்கான நீதிச்சபையை ஐ.நா பொதுச்செயலர் உருவாக்கவுள்ளாராம்

சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்களை விசாரிக்க, போர்க்குற்ற விசாரணைக்கான நீதிச்சபையை உருவாக்குவது தொடர்பான ஆவணங்கள் ஐ.நாவினால் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கெஹலிய ரம்புக்வெல.

ஐ.நா செயலணியுடன் இணைந்து செயற்படுவது குறித்து சிறிலங்கா ஆலோசனை

காணாமற்போனோர் தொடர்பான ஐ.நா செயலணியுடன் இணைந்து செயற்படுவது குறித்து சிறிலங்கா அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு, சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.