மேலும்

பிரிவு: செய்திகள்

ஆறாவது நாளாகத் தொடர்ந்தது தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம்

அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 தமிழ் அரசியல் கைதிகள், நேற்று ஆறாவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

அச்சுவேலி கொலைகள் – லெப்.கேணல் உள்ளிட்ட 5 இராணுவத்தினருக்கு விளக்கமறியல்

அச்சுவேலியில் 1998ஆம் ஆண்டு இரண்டு பொதுமக்களைச் சுட்டுக் கொன்ற வழக்கில், அச்சுவேலி இராணுவ முகாம் பொறுப்பதிகாரியாக இருந்த லெப்.கேணல் தர அதிகாரி உள்ளிட்ட 5 சிறிலங்கா இராணுவத்தினரை,  விளக்கமறியலில் வைக்க யாழ்.மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதிய கட்சியை ஆரம்பிக்கும் திட்டம் இல்லை – மகிந்த ராஜபக்ச

எகலியகொடவில் வரும் ஒக்ரோபர் 8ஆம் நாள் நடக்கவுள்ள கூட்டு எதிரணியின் பேரணியில் புதிய கட்சியை ஆரம்பிக்கும் திட்டம் இல்லை என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழு ஆய்வு

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட தலைவர்களின் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்துலக திணைக்கள மூத்த ஆய்வு ஆலோசகர் கலாநிதி சாய் ஷாங்ஜின் தலைமையிலான குழுவே கொழும்பு வந்துள்ளது.

எழுக தமிழ் பேரணியால் கூட்டமைப்புக்கு அச்சுறுத்தல் இல்லை – சி.வி.கே.சிவஞானம்

யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் பேரவையினால் முன்னெடுக்கப்பட்ட எழுக தமிழ் பேரணியினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று வட மாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காப் படைகளின் வசமுள்ள காணிகள் தொடர்பாக தேசிய கொள்கை

இடம்பெயர்ந்த மக்கள் மீளவும் இயல்பு வாழ்விற்குத் திரும்புவதற்கு அவசியமான, இராணுவம் மற்றும் காவற்துறையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் தேசியக் கொள்கை ஒன்றை வரைந்துள்ளது.

அரசியலமைப்புத் திருத்தம் மரணப் பொறி – என்கிறார் மகிந்த

அரசியலமைப்பைத் திருத்தும் தற்போதைய நகர்வுகள் ஒரு  மரணப் பொறி என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எழுக தமிழ் பேரணிக்கு அரசாங்கம் அஞ்சவில்லை – ருவான் விஜேவர்த்தன

வடக்கில் இருந்து படைகளை விலக்குமாறு சிலர் பேரணிகளை நடத்தினாலும், வடக்கில் இருந்து சிறிலங்கா படை முகாம்களை அகற்ற அரசாங்கம் ஒருபோதும் இணங்காது என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்தார்.

புலிகள் மீதான தடை குறித்த ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத் தீர்ப்பு – கவலையில் சிறிலங்கா

விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

மாலிக்கு அனுப்பப்படவிருந்த சிறிலங்கா இராணுவத்தினரின் தொகை கால்வாசியாக குறைப்பு

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றுவதற்காக அனுப்பப்படவிருந்த சிறிலங்கா இராணுவத்தினரின் எண்ணிக்கை நான்கில் ஒரு பங்காக குறைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.