மேலும்

பிரிவு: செய்திகள்

தேசிய மட்ட போட்டிகளில் யாழ். மாணவர்கள் புதிய சாதனை – அனித்தா, புவிதரனுக்கு தங்கம்

போகம்பரை மைதானத்தில் நடைபெற்று வரும் சிறிலங்காவின் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகளில், கோல்ஊன்றிப் பாய்தல் போட்டியில் 21 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் பிரிவிலும், 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவிலும், யாழ் மாவட்ட மாணவர்கள் புதிய சாதனை படைத்து தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்.

திருச்சி வழியாக கொழும்பு திரும்பும் சிறிலங்கா அதிபர் – விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு

பிரிக்ஸ் மற்றும் பிம்ஸ்ரெக் மாநாடுகளில் பங்கேற்பதற்காக இந்தியாவின் கோவா மாநிலத்துக்குச் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று திருச்சி வழியாக கொழும்பு திரும்பவுள்ளார். இதனை முன்னிட்டு திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சீன- சிறிலங்கா உறவுகளை வலுப்படுத்த இருநாடுகளின் தலைவர்களும் உறுதி

அணை மற்றும் சாலைக் கட்டமைப்புக்கு உட்பட்ட வகையில், இருதரப்பு நடைமுறைக்கேற்ற ஒத்துழைப்பை  மேலும் வலுப்படுத்துவதற்கு சீன, சிறிலங்கா தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

பிரிக்ஸ், பிம்ஸ்ரெக் மாநாடுகளில் சிறிலங்கா அதிபர் பங்கேற்பு

கோவாவில் நடைபெறும் பிரிக்ஸ் மற்றும் பிம்ஸ்ரெக் நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டார்.

சிறிலங்காவிடம் அவசர உதவி கோரிய அமெரிக்க நாசகாரி

அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் ஹொப்பர் என்ற ஏவுகணை நாசகாரி கப்பல் சிறிலங்கா கடல் எல்லைக்குள் நுழைந்து, சிறிலங்கா கடற்படையின் அவசர உதவியைப் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீன – சிறிலங்கா பாதுகாப்பு கலந்துரையாடல் – விபரங்களை மறைக்கும் சிறிலங்கா

இரண்டாவது சீன- சிறிலங்கா பாதுகாப்பு ஒத்துழைப்புக் கலந்துரையாடல், பீஜிங்கில் கடந்த 13ஆம் நாள் இடம்பெற்றதாக சீன இராணுவத் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா அதிபருடன் இந்தியப் பிரதமர் சந்திப்பு

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க கோவா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இன்று காலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

சீன அதிபருடன் இருதரப்பு பேச்சு நடத்தவுள்ளார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் இருதரப்புப் பேச்சுக்களை நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றிரவு கோவா சென்றடைந்தார் சிறிலங்கா அதிபர்

பிரிக்ஸ் மற்றும்  பலதுறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முனைப்பு அமைப்பு ஆகியவற்றின் மாநாடுகளில் பங்கேற்பதற்காக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு கோவா சென்றடைந்தார்.

சிறிலங்காவின் கன்னத்தில் அறைந்த சீனா – உபுல் ஜோசப் பெர்னான்டோ

போர்க் காலத்தில் ராஜபக்ச அரசாங்கமானது தமக்கு எதிராகச் செயற்பட்ட ஊடகவியலாளர்களைக் குறிவைத்து வேட்டையாடியது. இதனால் தமது உயிரைப் பாதுகாப்பதற்காக அப்பாவி ஊடகவியலாளர்கள் இந்தியாவிற்குத் தப்பியோடினர்.