மேலும்

பிரிவு: செய்திகள்

முல்லைத்தீவில் சிறிலங்கா இராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவுக்கான சுழியோடும் பயிற்சி பாடசாலை

முல்லைத்தீவு- நாயாறில், சிறப்புப் படைப்பிரிவுக்கான சுழியோடும் பயிற்சி பாடசாலை ஒன்றை சிறிலங்கா இராணுவம் புதிதாக அமைத்துள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் சிங்கப்பூர்- சிறிலங்கா இடையே சுதந்திர வர்த்தக உடன்பாடு

இந்த ஆண்டு இறுதிக்குள் சிங்கப்பூருக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்பாடு கையெழுத்திடப்படும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

5 மில்லியன் ரூபா கொடுத்து கேப்பாப்பிலவில் 189 ஏக்கர் காணிகள் இன்று விடுவிப்பு

முல்லைத்தீவு- கேப்பாப்பிலவில், சிறிலங்கா படையினர் வசம் இருந்த 189 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்படவுள்ளதாக சிறிலங்காவின் புனர்வாழ்வு, மீள்குடியேற்ற மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவத் தளபதியுடன் இந்தியத் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு

இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர பயிற்சித் திட்டங்கள் தொடர்பாக, சிறிலங்கா இராணுவத் தளபதியுடன், இந்தியத் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கலந்துரையாடியுள்ளார்.

ஐ.நா நிபுணருக்கு அனுமதி கொடுத்தது யார்? – அமைச்சரவையில் சீறிய மைத்திரி

ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சனை, சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்களைச் சந்திக்க அனுமதி கொடுத்தது யார் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பியுள்ளார்.

சம்பந்தனுடன் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் பேச்சு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

கொமடோர் தசநாயக்கவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பொய் – என்கிறார் கம்மன்பில

சிறிலங்கா கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் கொமடோர் டி.கே.பி.தசநாயக்கவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்று பிவிதுரு ஹெல உறுமயவின் பொதுச்செயலர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் நாளை சிறிலங்கா வருகிறார்

ஐ.நா பொதுச்செயலரின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் ஜெப்ரி பெல்ட்மன், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

டெனீஸ்வரனுக்கு பதிலாக விந்தனை அமைச்சராக நியமிக்குமாறு முதலமைச்சருக்கு ரெலோ பரிந்துரை

வடக்கு மாகாண அமைச்சரவையில் தமது கட்சியின் சார்பில் அமைச்சராக நியமிக்கப்பட்ட, பா.டெனீஸ்வரனை, அந்தப் பதவியில் இருந்து நீக்கி விட்டு, தமது கட்சியைச் சேர்ந்த மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணத்தை அமைச்சராக நியமிக்குமாறு, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ரெலோ கடிதம் அனுப்பியுள்ளது.

தமிழ் உணர்வாளர், சிந்தனையாளர் ஓவியர் வீர.சந்தானம்

ஓவியர் சந்தனத்தின் தியாகங்களை எழுத்துக்களில் சாதாரணமாக வடித்துவிட முடியாது. எளியக் குடும்பத்தில் பிறந்த வீர.சந்தானம் சுயம்புவாக வளர்ந்து ஓவியராக உருவெடுத்தார்.  கலைஞன் என்பதன் உண்மையான அடையாளமாக திகழ்ந்தார். தனது வாழ்க்கை முழுவதையும் தமிழுக்காகவும்,ஈழத்தமிழர் நலனுக்காகவும் அர்ப்பணித்துக் கொண்டவர்.