ஊவா முன்னாள் முதலமைச்சர் சசீந்திர ராஜபக்சவிடம் விசாரணை
ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சசீந்திர ராஜபக்சவிடம், நிதிக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிறப்பு காவல்துறைக் குழுவினர் இன்று விசாரணை நடத்தியுள்ளனர்.
ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சசீந்திர ராஜபக்சவிடம், நிதிக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிறப்பு காவல்துறைக் குழுவினர் இன்று விசாரணை நடத்தியுள்ளனர்.
ரஸ்யாவுக்கான சிறிலங்காவின் தூதுவராக இருந்த உதயங்க வீரதுங்க உக்ரேனிய பிரிவினைவாதப் போராளிகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்த குற்றச்சாட்டுத் தொடர்பாக விரைவில் நாடாளுமன்றத்தில் விரிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 19வது திருத்தச் சட்டமூலத்தில், அரசியலமைப்புடன் உடன்படாத- நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் கருத்து வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டிய விடயங்களை சிறிலங்கா உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
யாழ்.குடாநாட்டில் எழுந்துள்ள குடிநீர்ப் பிரச்சினையில் அரசியலைப் புகுத்த வேண்டாம் என்று கோரி, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார்.
சிறிலங்காவில் போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிப்பதற்கான பொறிமுறை பற்றிய விபரங்களை வரும் ஜூன் மாத இறுதியிலேயே வெளியிடவுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
19வது திருத்தச்சட்டமூலம் வரும் 20ம் நாள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின்னர், நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 19வது அரசியலமைப்புத் திருத்தம், சிறிலங்காவின் அரசியலமைப்புக்கு இசைவானதே என்றும், எனினும் இதன் சில பகுதிகளை நிறைவேற்ற கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் சிறிலங்கா உயர்நீதிமன்றம் வியாக்கியானம் தெரிவித்துள்ளது.
சீன மக்கள் விடுதலை கடற்படை இராணுவத்தின் மனிதாபிமான நடவடிக்கைகளை கோடிட்டுக்காட்டும் போது, சீனாவானது பூகோள இராணுவப் பிரசன்னம் அனைத்துலகிற்கு நலன் பயப்பதாக நியாயப்படுத்துகிறது.
இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் கடலுக்கு அடியிலான மின் வழித்தட இணைப்பை ஏற்படுத்தும், 3000 கோடி ரூபா திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கமே முடிவெடுக்க வேண்டும் என்று, இந்திய அரசுத் துறை நிறுவனமான பவர் கிரின்ட் கோப்பரேசன் தெரிவித்துள்ளது.
பிரபல தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தனும், பிரபல இஸ்லாமியப் பாடகர் நாகூர் ஹனீபாவும், நேற்று சென்னையில் காலமாகினர். பிரபல எழுத்தாளரான ஜெயகாந்தன், உடல் நலக்குறைவால் நேற்றிரவு 9 மணியளவில், காலமானார். அவருக்கு வயது 81.