மேலும்

பிரிவு: செய்திகள்

சிறிலங்காவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

ஐ.நாவுக்கு ஒத்துழைப்பு வழங்குவோரை மௌனமாக்க சிறிலங்கா முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ள அமெரிக்கா, அது ஐ.நாவின் மீதான தாக்குதல் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது.

பிடிவாதத்தை தளர்த்தினார் ரணில் – போட்டியில் இருந்து ஒதுங்க முடிவு

அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெறவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலில், ஐதேக சார்பில், போட்டியிடப் போவதாக கூறி வந்த அந்தக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனது நிலைப்பாட்டைத் தளர்த்திக் கொண்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.

கொழும்புத் துறைமுகத்தை விட்டுப் புறப்பட்டது சீன நீர்மூழ்கி

கொழும்புத் துறைமுகத்தில் ஒரு வாரமாகத் தரித்து நின்ற சீன கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலும், போர்க்கப்பலும், நேற்று அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்னேஸ்வரன் இன்று தமிழ்நாட்டுக்குப் பயணம் – அரசியல் தலைவர்களை சந்திக்கமாட்டார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று சென்னைக்குப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

ஐ.நா விசாரணைக்குழுவின் நெகிழ்வுத்தன்மை – சிறிலங்கா கடும் அதிர்ச்சி

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்துக்கு காலதாமதமாக அனுப்பப்படும் சாட்சியங்கள் நிராகரிக்கப்படமாட்டாது என்று ஐ.நா அறிவித்துள்ளது குறித்து சிறிலங்கா அரசாங்கம் கடும் அதிர்ச்சி வெளியிட்டுள்ளது.

முன்றாவது முறையும் போட்டியிட முடியுமா? – உயர்நீதிமன்றிடம் விளக்கம் கோரினார் மகிந்த

18வது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு அமைய மூன்றாவது முறையாக, அதிபர் பதவிக்குத் தான் போட்டியிட முடியுமா என்பது தொடர்பான சட்ட விளக்கத்தை வழங்குமாறு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, சிறிலங்கா உயர்நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.

இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்

“சீனாவின் நீர்மூழ்கிக்கப்பலுக்கு சிறிலங்கா தனது நாட்டில் அனுமதியளித்ததானது இந்தியாவின் உயர்மட்டத்தில் பல்வேறு எதிர்க்கருத்துக்களை உருவாக்கியுள்ளது”. இவ்வாறு ‘THE TIMES OF INDIA’ ஆங்கில நாளேட்டில் Sachin Parashar எழுதியுள்ள செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளார். அதனை ‘புதினப்பலகை’க்காக மொழியாக்கம் செய்தவர் நித்திபாரதி.

நியாயமான விசாரணை நடத்த தவறியதால் தான் ஐ.நா விசாரணை – இரா. சம்பந்தன்

போர்க்குற்றங்கள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் நியாயமான விசாரணைகளை நடத்தியிருந்தால், ஐ.நா மனித உரிமைகள் பேரவை விசாரணை நடத்தும் நிலை ஏற்பட்டிருக்காது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கதிகலங்கிப் போனது கட்டுநாயக்க விமான நிலையம்

கட்டுநாயக்க அனைத்துலக விமான நிலையப் பணியாளர்கள் இன்று காலை நடத்திய திடீர் பணிநிறுத்தப் போராட்டத்தினால், சிறிலங்காவுக்கான விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தடை செய்ய வேண்டும்” – சிறிலங்கா அமைச்சர் கோரிக்கை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்துள்ளார், சிறிலங்காவின் தொழில் மற்றும் தொழில் உறவுகள் பிரதி அமைச்சர் றியர் அட்மிரல் சரத் வீரசேகர.