மேலும்

பிரிவு: செய்திகள்

மகிந்த சிந்தனை வெளியீட்டு நிகழ்வில் ரத்னசிறி பங்கேற்காததால் பரபரப்பு

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்ட நிகழ்வில், மூத்த அமைச்சரும், முன்னாள் பிரதமருமான ரத்னசிறி விக்கிரமநாயக்க கலந்து கொள்ளவில்லை.

வெளிநாட்டுத் தலையீடுகளை அனுமதியேன் – மகிந்த சூளுரை

சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கு வெளிநாடுகள் முயற்சிப்பதாகவும், அதற்குத் தான் ஒருபோதும், இடமளிக்க மாட்டேன் என்றும் சூளுரைத்துள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச.

ரோம் பிரகடனத்தில் கையெழுத்திடாவிட்டாலும், சிறிலங்காவுக்கு ஆபத்து – ஜி.எல்.பீரிஸ்

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் தொடர்பான ரோம் பிரகடனத்தில் கையெழுத்திடாவிட்டாலும், சிறிலங்காவுக்கு ஆபத்து உள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இரகசிய உடன்பாட்டு ஆவணம் போலியானது – மங்கள சமரவீர

எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஐதேக  தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டதாக வெளியிடப்பட்ட இரகசிய உடன்பாட்டு ஆவணம், போலியானது என்று ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

எதிரணியின் கிண்டலால் அவசரமாக வெளியாகிறது மகிந்தவின் தேர்தல் அறிக்கை

‘மகிந்த சிந்தனை- முக்கால நோக்கு’ என்ற தலைப்பிலான, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் தேர்தல் அறிக்கை இன்று அவசர அவசரமாக வெளியிடப்படவுள்ளது.

முடிவெடுத்தது முஸ்லிம் காங்கிரஸ் – இன்று அறிவிப்பு வெளியாகும்?

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு, எதிர்வரும் அதிபர் தேர்தலில், எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமீர் அலி பதவிவிலக வேண்டும் – பகிரங்கமாக அழுத்தம் கொடுத்த மகிந்த

அகில இலங்கை மக்கள் காங்கிரசை சேர்ந்த அமீர் அலி, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மைத்திரி – ரணில் இரகசிய உடன்பாட்டில் கூறப்பட்டிருப்பது என்ன?

எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டதாக கூறப்படும், இரகசிய உடன்பாட்டின் பிரதியை, சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க வெளியிட்டுள்ளார்.

சிறிலங்காவுக்கான புதிய பிரித்தானியத் தூதுவராக ஜேம்ஸ் டோறிஸ் நியமனம்

சிறிலங்காவுக்கான புதிய தூதுவராக, ஜேம்ஸ் டோறிஸ்,  நியமிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகம் தெரிவித்துள்ளது.

தோல்வியுற்றால் அமைதியாக ஆட்சியை ஒப்படைப்பேன் – உறுதி கூறுகிறார் மகிந்த

அதிபர் தேர்தலில் தாம் தோல்வியுற்றால் அமைதியான முறையில் ஆட்சியை ஒப்படைத்து விடுவேன் என்று மீண்டும் உறுதியளித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச.