மேலும்

பிரிவு: செய்திகள்

யோசித ராஜபக்சவின் நண்பியிடம் தீவிர விசாரணை

சிறிலங்காவின் ரக்பி அணி வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பாக, அவரது நண்பியான யசாரா அபேநாயக்கவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.

சீனாவிடம் பெற்ற கடனை அடைக்க 400 ஆண்டுகள் செல்லும் – அதிர்ச்சித் தகவல்

அம்பாந்தோட்டை துறைமுகத்தை அமைப்பதற்காக சீனாவிடம் பெற்ற கடனை சிறிலங்கா அடைப்பதற்கு 400 ஆண்டுகள் செல்லும் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் சிறிலங்காவின் நெடுஞ்சாலைகள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சர் ஏரான் விக்கிரமரத்ன.

தாஜுதீன் கொலை: சிறிலங்கா செஞ்சிலுவைச் சங்கப் பணிப்பாளரிடம் 6 மணிநேரம் விசாரணை

சிறிலங்காவின் ரக்பி அணி வீரர் வசீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா செஞ்சிலுவைச் சங்கத்தின் பணிப்பாளர் நாயகம் ஜெகத் அபேநாயக்கவிடம், ஆறு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் திறன் விருத்தி நிலையத்தை அமைக்கிறது இந்தியா

யாழ்.பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தில் திறன் விருத்தி நிலையம் ஒன்றை அமைக்கும் 300 மில்லியன் ரூபா திட்டம் ஒன்றை இந்தியா ஆரம்பித்துள்ளது.

தெருக்களில் திரிக, தமிழர்கள் அனைவரும், நிர்வாணம் கொண்டு…

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர்-2010 ஏப்ரலில் நடந்த சிறிலங்கா நாளுமன்றத் தேர்தலை ஒட்டி ‘புதினப்பலகை’ வெளியிட்ட ‘புதினப்பார்வை’ இது. தற்போதைய அரசியல் சூழலுக்கும் இது மிகப் பொருத்தமானதாக இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு மீள் பிரசுரம் செய்யப்படுகிறது. – (புதினப்பலகை குழுமத்தினர்)

ராஜீவ் கொலை கைதிகள் விடுதலைக்கு எதிரான வழக்கில் இந்திய மத்திய அரசின் வாதங்கள் பிசுபிசுப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்குத் தொடர்பாக இந்திய மத்திய அரசிடம் சரமாரியாக கேள்விகளை  எழுப்பியுள்ள இந்திய உச்சநீதிமன்றம், 7 பேரை ஏன் விடுவிக்கக் கூடாது என்பதற்கான மத்திய அரசின் வாதங்கள் தெளிவாக இல்லை என்றும் கூறியுள்ளது.

இந்தியாவுடன் தரைவழி இணைப்பை ஏற்படுத்தும் திட்டம் – பரிசீலிக்கத் தயார் என்கிறது சிறிலங்கா

இராமேஸ்வரத்தையும் தலைமன்னாரையும் இணைக்கும் தொடருந்து மற்றும் நெடுஞ்சாலை இணைப்பு வழியை உருவாக்குவது தொடர்பாக இந்திய அரசாங்கம் இதுவரையில் சிறிலங்காவிடம் அதிகாரபூர்வமான  தகவலைப் பரிமாறவில்லை என்று சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

பிரகீத்தை கடத்துவதற்கு முன்னாள் புலிகளை தந்திரமாகப் பயன்படுத்திய சிறிலங்கா இராணுவம்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு பல நாட்களாக கிரிதல இராணுவ முகாமில் வைத்து விசாரணை செய்யப்பட்ட பின்னரே காணாமற்போகச் செய்யப்பட்டுள்ளார் என்று, குற்றப்புலனாய்வுப் பிரிவு நடத்திய விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்காக கடும் சவாலை எதிர்கொண்டுள்ள மகிந்த – ஏஎவ்பி

ராஜபக்ச தனது தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் தனது ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றங்கள் தொடர்பாக மக்கள் தெரிவிக்கும் போது அதனை இல்லை என வாதிடாது இவ்வாறான குற்றங்கள் மீண்டும் இடம்பெறாது என்பதைக் கூறிவருகிறார்.

பிரகீத் கடத்தலில் திடீர் திருப்பம் – முக்கிய தகவல்களை வெளியிட்டார் இராணுவ அதிகாரி

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற் போனது தொடர்பாக, சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த சார்ஜன்ட் மேஜர் தர அதிகாரியும், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்ற ஒருவரும், கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.