மேலும்

பிரிவு: செய்திகள்

பிரபாகரன் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்கிறார் சரத் பொன்சேகா

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், மோட்டார் குண்டு அல்லது ஷெல் ஒன்றின் சிதறல் தாக்கியே மரணமாகியிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

எதிர்க்கட்சித் தலைவர் தெரிவு இன்று இல்லை – கூட்டமைப்புக்கு குழுக்களின் பிரதி தலைவர் பதவி

சிறிலங்காவின் புதிய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவு இன்று இடம்பெறாது என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கட்டுநாயக்கவின் ரமபோசாவுடன் இரகசியப் பேச்சு நடத்தப்பட்டதா? – மறுக்கிறது சிறிலங்கா

தென்னாபிரிக்க துணை அதிபர் சிறில் ரமபோசா, சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவில்லை என்றும், அவருடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சுக்களை நடத்தவில்லை என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மகேஷினி கொலன்னே தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் முடுக்கிவிடப்பட்டுள்ள சிறிலங்காவின் இராஜதந்திர நகர்வுகள்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30 ஆவது அமர்வு எதிர்வரும் 14ஆம் நாள் ஆரம்பமாகவுள்ள நிலையில், ஜெனீவாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் இராஜதந்திரச் செயற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இன்று காலை கூடுகிறது சிறிலங்காவின் புதிய நாடாளுமன்றம்

சிறிலங்காவின் 8ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை ஆரம்பமாகவுள்ளது. இன்று காலை 9.30 மணிக்கு கூடும் புதிய நாடாளுமன்றத்தில், முதலில், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் தெரிவுகள் இடம்பெறும்.

சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்புக் கருத்தரங்கு நாளை ஆரம்பம் – கொழும்பு வந்தார் ஹமீத் கர்சாய்

சிறிலங்கா இராணுவம் நடத்தும் பாதுகாப்புக் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் இன்று பிற்பகல் கொழும்பு வந்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரைத் தீர்மானிப்பது சபாநாயகர் தான் – லக்ஸ்மன் கிரியெல்ல

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரை நியமிக்கும் அதிகாரம் சபாநாயகருக்கே இருப்பதாக ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

புதிய கூட்டணியை உருவாக்க மகிந்த ஆதரவு அணி முயற்சி – உடைக்க முனைகிறார் மைத்திரி?

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகள், புதிய அரசியல் கூட்டணி ஒன்றை உருவாக்குவது தொடர்பாக கலந்துரையாடி வருவதாக, பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் விடயத்தில் தலையிடேன் – பங்காளிக் கட்சிகளிடம் மைத்திரி உறுதி

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரைத் தெரிவு செய்யும் விவகாரத்தில் தாம் தலையிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

விசுவாசிகளாலேயே தோற்கடிக்கப்பட்ட மகிந்த – நடந்தது என்ன? – உபுல் ஜோசப் பெர்னான்டோ

மகிந்தவின் விசுவாசிகளே மகிந்தவின் தேர்தல் தோல்விக்குக் காரணம். தேர்தல் பரப்புரைக்கு தலைமை தாங்குவதற்கு மைத்திரியை மகிந்த அனுமதித்திருந்தால், சிறிலங்கா சுதந்திரக் கட்சி பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும். மகிந்தவின் விசுவாசிகள் மகிந்தவை மட்டுமல்ல சிறிலங்கா சுதந்திரக் கட்சியையும் தோற்கடித்துள்ளனர்.