மேலும்

பிரிவு: செய்திகள்

பிள்ளையானை நொவம்பர் 4ஆம் நாள் வரை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தனை, எதிர்வரும் நொவம்பர் 4ஆம் நாள் வரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மன்னார் கடற்படுக்கையில் எண்ணெய் அகழ்வுக்கு புதிய கேள்விப்பத்திரம்

மன்னார் கடற்படுக்கையில் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வை மேற்கொள்வதற்கு, சிறிலங்கா அரசாங்கம் புதிய கேள்விப்பத்திரங்களைக் கோரவுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் படுகொலைகள் குறித்து விசாரிக்க புதிய குழு

நாடாளுமன்ற உறுப்பினர்களின் படுகொலைகள் தொடர்பாக விசாரிக்க, நாடாளுமன்றக் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளின் விடுதலை: சிறிலங்கா அரசு உறுதியான பதில் இல்லை – சுமந்திரன் விசனம்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் எந்த உறுதியான பதிலையும் வழங்கவில்லை என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் விசனம் தெரிவித்துள்ளார்.

மூன்றாவது நாளை எட்டியது அரசியல் கைதிகளின் போராட்டம் – நான்கு பேர் மருத்துவமனையில்

தமது விடுதலையை வலியுறுத்தி, தமிழ் அரசியல் கைதிகள் ஆரம்பித்த  சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று மூன்றாவது நாளை எட்டியுள்ள நிலையில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட நான்கு கைதிகளின் உடல்நிலை மோசமடைந்த நிலையில் சிறைச்சாலை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

14 ஆண்டுகளுக்குப் பின் ஊர்காவற்றுறை தாக்குதல் வழக்கு – 2 ஈபிடிபியினருக்கு விளக்கமறியல்

2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக்காக தீவகத்துக்குச் சென்ற, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பான வழக்கு, 14 ஆண்டுகளுக்குப் பின்னர் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்களான 2 ஈபிடிபியினரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பிள்ளையானை நாளை வரை தடுத்து வைத்து விசாரிக்க சிறிலங்கா காவல்துறை முடிவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் நாளை வரை தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படவுள்ளார்.

மன்னார் கடற்படுகையில் எண்ணெய் அகழ்வுப் பணிகளில் இருந்து வெளியேறுகிறது இந்திய நிறுவனம்

மன்னார் கடற்படுகையில், எண்ணெய் அகழ்வு முயற்சியில் ஈடுபட்டிருந்த கெய்ன் இந்தியா நிறுவனம், சிறிலங்காவில் இருந்து வெளியேறவுள்ளது.

நீருக்குள் கண்ணிவெடிகளை அகற்ற சிறிலங்கா கடற்படைக்கு அமெரிக்கா பயிற்சி

நீருக்குள் கண்ணிவெடிகளை அகற்றுவது தொடர்பான இரண்டு வாரகாலப் பயிற்சிகளை அமெரிக்க கடற்படை அதிகாரிகள், சிறிலங்கா கடற்படையினருக்கு அளித்துள்ளனர்.  திருகோணமலையில் இந்தப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாக, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

யாழ். மறைமாவட்டத்தின் புதிய ஆயராக வண.ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அடிகளார் நியமனம்

கத்தோலிக்கத் திருச்சபையின் யாழ். மறைமாவட்டத்தின் புதிய ஆயராக வண.ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் அடிகளார் நியமிக்கப்பட்டுள்ளதாக, வத்திக்கான் வானொலி அறிவித்துள்ளது.