மேலும்

பிரிவு: செய்திகள்

மைத்திரியுடனான சந்திப்புக்கு குறித்து மகிந்தவுக்குத் தெரியாதாம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், நாளை சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை, முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்குத் தெரியாது என்று அவரது பேச்சாளர், தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ கைது

சிறிலங்காவின் முன்னாள் அமைச்சரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்னான்டோ, சற்றுமுன்னர் சிறிலங்கா காவல்துறையின் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜோன் கெரிக்கு ‘வீட்டுவேலை’ கொடுத்த முதலமைச்சர் விக்னேஸ்வரன்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கையளித்த ஆவணத்தை வாங்கிப் பார்த்த, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, தனக்கு நிறைய வீட்டு வேலை தரப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கான தூதுவராக நியமிக்கப்படுகிறார் ஜெனரல் தயா ரத்நாயக்க?

பாகிஸ்தானுக்கான தூதுவராக, சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க நியமிக்கப்படவுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

திஸ்ஸ அத்தநாயக்கவை ஐதேக வெளியேற்றியது செல்லாது- உயர்நீதிமன்றம் தீர்ப்பு

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க நீக்கப்பட்டது செல்லுபடியாகாது என்று சிறிலங்கா உயர்நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பளித்துள்ளது.

கிளிநொச்சியில் சிறிலங்கா மத்திய வங்கியின் பிராந்தியப் பணியகம் – நாளை திறப்பு

சிறிலங்கா மத்திய வங்கியின் பிராந்திய பணியகம் ஒன்று, கிளிநொச்சியில் நாளை திறந்து வைக்கப்படவுள்ளது. கிளிநொச்சியில் உள்ள அறிவியல் நகரில், இந்த பிராந்தியப் பணியகம் நாளை முதல் செயற்படவுள்ளது.

சிறிலங்காவுக்கு கடல்சார் பாதுகாப்பு உதவிகளை அளிக்கவுள்ளது அமெரிக்கா

சிறிலங்காவுக்கு கடர்சார் பாதுகாப்பு உதவிகளை வழங்கும் திட்டம், அமெரிக்காவுக்கு இருப்பதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பதில் பிரதிப் பேச்சாளர் ஜெப் ரத்கே தெரிவித்துள்ளார். வொசிங்டனில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வெசாக் கொண்டாட்டங்களில் நிஷா பிஸ்வால் – இன்று கொழும்பில் இருந்து புறப்பட்டார்

அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால், சிறிலங்காவுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு இன்று கொழும்பில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

சிறிலங்கா மீதான ஒபாமா நிர்வாகத்தின் கொள்கை மாற்றம் காணுமா?

சிறிலங்கா தொடர்பில் அடுத்த சில மாதங்களுக்கு ஒபாமா நிர்வாகம் மிகவும் சாதகமான உறுதியான தொடர்பைப் பேண முயற்சிக்கும். ஏனெனில் சிறிலங்காவில் புதிதாகத் தெரிவாகிய அரசாங்கம் மீதான இராஜதந்திர அழுத்தத்தைக் குறைப்பதற்கான நகர்வுகளை அமெரிக்கா தொடர்ந்தும் மேற்கொள்ளும்.

ஆபத்தான கட்டத்தைத் தாண்டினார் மன்னார் ஆயர் – உள்ளக இரத்தக்கசிவுக்கு சிகிச்சை

கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள மன்னார் ஆயர் இராயப்பு யோசெப் ஆபத்தான கட்டத்தைத் தாண்டியுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.