மேலும்

பிரிவு: செய்திகள்

“உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”

2009ஆம் ஆண்டு, சூறைகாற்று சுழன்றடித்து, ஈழத் தமிழினத்தை நடுத்தெருவுக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருந்த தருணத்தில், இதே நாளில் தொடங்கியது இந்தப் பயணம்.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவராக மகிந்த தேசப்பிரிய நியமனம்

சிறிலங்காவில் புதிதாக உருவாக்கப்படும்  சுதந்திர தேர்தல் ஆணைக்குழுவின் தலைவராக, தற்போதைய தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரபாகரன் பாதுகாத்த காங்கேசன் சீமெந்து ஆலையை அழித்து விட்டார்கள் – முகாமையாளர் குற்றச்சாட்டு

பிரபாகரன் பாதுகாத்த காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை, எமது சிறிலங்கா படையினரின் உதவியுடன் எமது ஆட்களே அழித்து விட்டதாக, விசனம் வெளியிட்டுள்ளார் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் வேலை முகாமையாளர் ரியாஸ் சாலி.

கவலைக்கிடமான நிலையில் 15 அரசியல் கைதிகள் – மருத்துவ உதவிகளை நிராகரிப்பு

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 15 அரசியல் கைதிகளின் நிலை மோசமடைந்துள்ளதாகவும், அவர்கள் மருத்துவ சிகிச்சையை ஏற்க மறுப்புத் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று மேலும் 8 அரசியல் கைதிகளுக்கு பிணை

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 தமிழ் அரசியல் கைதிகள் இன்று பிணையில் விடுவிக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டம் குறித்து ஆராய நாளை கூட்டமைப்பின் முக்கிய கூட்டம்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் நாளை கூடி ஆராயவுள்ளனர்.

அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து இன்று முடிவு? – பிரதமர் செயலகத்தில் முக்கிய கூட்டம்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக இன்று தமது முடிவை அறிவிப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி அளித்திருந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஆராய சிறிலங்கா பிரதமர் தலைமையில் இன்று முக்கிய கூட்டம் இடம்பெறவுள்ளது.

வடக்கில் கொட்டும் பெருமழை – ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நிர்க்கதி

சிறிலங்காவில் கொட்டி வரும் பெரு மழையினால், ஒரு இலட்சம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர், குறிப்பாக வடக்கு மாகாணம் வெள்ளத்தினால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

காயம்பட்ட முல்லைத்தீவின் அழகு – இந்திய ஊடகவியலாளர்

போரின் போது இருந்த ஊரடங்குக் கலாசாரமானது தற்போதும் வடக்கில் தாக்கத்தைச் செலுத்துவதைக் காணலாம். அதாவது வடக்கிலுள்ள வர்த்தக நிலையங்கள் சூரியன் மறையும் நேரத்தில் பூட்டப்படுவதானது ஊரடங்கின் தாக்கத்தை உறுதிப்படுத்துகின்றது.

இந்திய குடியரசுத் தலைவரிடம் நியமன ஆவணங்களை கையளித்தார் சிறிலங்காவின் புதிய தூதுவர்

இந்தியாவுக்கான சிறிலங்காவின் புதிய தூதுவர் எசல வீரக்கோன், இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் தனது நியமனம் தொடர்பான ஆவணங்களை அதிகாரபூர்வமாக கையளித்துள்ளார்.