மேலும்

பிரிவு: செய்திகள்

அனைத்துலக நாணய நிதியம் மீது சிறிலங்கா விசனம் – வொசிங்டனிடம் முறைப்பாடு

சிறிலங்காவின் பொருளாதாரக் கொள்கை தொடர்பாக அனைத்துலக நாணய நிதியம் வெளியிட்ட எச்சரிக்கை அறிக்கை சிறிலங்கா அரசாங்கத்துக்கு கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாஜுதீன் கொலை வழக்கில், மகிந்தவின் சாரதியான இராணுவ அதிகாரி கைதாகிறார்

சிறிலங்கா ரக்பி அணியின் முன்னாள் தலைவர் வசீம் தாஜுதீன் கொலை வழக்கில், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் சாரதி ஒருவர் கைது செய்யப்படவுள்ளார்.

திருமலை, முல்லைத்தீவு வழியாக வடக்கிற்கு புதிய அதிவேக நெடுஞ்சாலை – திசை மாறிய திட்டம்

திருகோணமலை, முல்லைத்தீவு வழியாக வடக்கிற்கான பாரிய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம் அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ளதாக, சிறிலங்காவின் வீதி அபிவிருத்தி அதிகாரசபை பணிப்பாளர் நாயகம் எம்.பி.கே.எல்.குணரத்ன தெரிவித்துள்ளார்.

மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவி – ‘எட்டாத பழம் புளிக்கும்’ என்கிறார் சம்பந்தன்

மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவி போன்ற சலுகைகளை சிறிலங்கா அரசாங்கத்திடம் இருந்து பெறுவது அரசியல் தீர்வு என்ற இலக்கைப் பலவீனப்படுத்துவதாக அமையும் என்று கருத்து வெளியிட்டுள்ளார் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் கூடாது – வடக்கு முதல்வருக்கு இந்தியத் தூதுவர் அறிவுரை

அரசியல்தீர்வு ஒன்றை எட்டுவதற்கான சூழ்நிலைகள் உருவாகியுள்ள சந்தர்ப்பத்தில், தமிழர் தரப்பு பிளவுபடாமல், ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்று, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம், இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா வலியுறுத்திக் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ‘இந்தியா கோணர்’ திறந்து வைப்பு

யாழ். பொது நூலகத்தில் “இந்தியா கோணர்” நேற்று திறந்து வைக்கப்பட்டது. இதனை சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஆளுனர் எச்.எம்.ஜி.எஸ்.பாலிஹக்கார ஆகியோர் திறந்து வைத்தனர்.

காணாமற்போனோருக்கு மரணச்சான்றிதழ் பெறுமாறு அழுத்தம் கொடுக்கும் ஆணைக்குழு

யாழ். மாவட்டத்தில் காணாமற்போனோர் தொடர்பான விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழு நடத்தி வரும், அமர்வில் சாட்சியமளிக்கும், உறவுகளிடம், மரணச்சான்றிதழையும், இழப்பீட்டையும் பெற்றுக் கொள்ளுமாறு ஆணைக்குழு அதிகாரிகள் அழுத்தம் கொடுத்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

வெளிநாடுகளில் உள்ள தூதரகங்கள் சிலவற்றை மூட சிறிலங்கா அரசு திட்டம்

வெளிநாடுகளில் உள்ள தூதரகங்கள் பலவற்றை மூடுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அனுமதி பெறாமல் ஜெனிவா தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படாது – சிறிலங்கா அரசு உறுதி

நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெறாமல், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்தாது என்று பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ.டி.சில்வா தெரிவித்தார்.

பேரம் பேசும் பலம் கூட்டமைப்புக்கு உள்ளதா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பேரம் பேசும் பலத்தைக் கொடுங்கள், அதனைக் கொண்டு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வைப் பெற்றுத் தருவோம் என்று, நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரியிருந்தார்.