மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

ஆனையிறவில் அமைகிறது அனைத்துலக துடுப்பாட்ட மைதானம்

ஆனையிறவுப் பகுதியில், அனைத்துலக துடுப்பாட்ட மைதானம் ஒன்றை கட்டுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, சிறிலங்காவின் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

சீனா சென்றார் சிறிலங்கா நிதியமைச்சர்

சீனாவின் முன்முயற்சியில், அண்மையில் உருவாக்கப்பட்ட ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின், முதலாவது ஆண்டுப் பொதுக்கூட்டம் இன்று பீஜிங்கில் ஆரம்பமாகிறது.

அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிட மைத்திரிக்கு அழுத்தம்

2020ஆம் ஆண்டு நடக்கவுள்ள அடுத்த அதிபர் தேர்தலில், மீண்டும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன போட்டியிட வேண்டும் என்று, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பந்தனைச் சந்தித்தார் அமெரிக்கத் தூதுவர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் நேற்று சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவின் முடிவினால் சிறிலங்காவுக்கும் பாதிப்பு – புதிய உடன்பாட்டுக்கு திட்டம்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகவுள்ளதையடுத்து, அந்த நாட்டுடன் புதிய பொருளாதார உடன்பாடு ஒன்று செய்து கொள்ளப்படும் என்று சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

முன்னேற்றம் இல்லாதவற்றை சுட்டிக்காட்டுக – ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு அவசர கடிதம்

ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட சிறிலங்கா தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் முன்னேற்றம் இல்லாத விடயங்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் தனது வாய்மூல அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்று, அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் கோரியுள்ளன.

இந்தோனேசியாவிலுள்ள 44 அகதிகளையும் திருப்பி அழைத்துக் கொள்ளத் தயார் – சிறிலங்கா

அவுஸ்ரேலியாவுக்குச் செல்லும் வழியில், படகு பழுதடைந்ததால், இந்தோனேசியாவில் தரைதட்டிய 44 இலங்கைத் தமிழ் அகதிகளையும், மீண்டும் திருப்பி அழைத்துக் கொள்வதற்கு, சிறிலங்கா அரசாங்கம் விருப்பம் வெளியிட்டுள்ளது.

நோர்வே பிரதமருடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

மரணதண்டனைக்கு எதிரான ஆறாவது உலக மாநாட்டில், பங்கேற்பதற்காக ஒஸ்லோ சென்றுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நோர்வே பிரதமரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

முப்படைகளில் இருந்து தப்பிச் சென்ற 4500 படையினர் சட்டபூர்வமாக விலகல்

பொதுமன்னிப்பு அறிவிக்கப்பட்ட காலப்பகுதியில், முப்படைகளிலும் இருந்து தப்பியோடிய சுமார் 4500 பேர் சட்டபூர்வமாக படைகளில் இருந்து விலகிச் சென்றுள்ளதாக, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்காத உள்ளக விசாரணையை விக்னேஸ்வரன் நிராகரிப்பு

போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க உள்ளக விசாரணை மேற்கொள்ளப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கியிருந்தால் மாத்திரமே, உள்ளக விசாரணையைக் கருத்தில் எடுத்துக் கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.