மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

பேரழிவு ஆயுதங்களின் பரவலைத் தடுப்பது குறித்து சிறிலங்கா அதிகாரிகளுக்கு அமெரிக்கா பயிற்சி

பேரழிவு ஆயுதங்களின் பரவலைத் தடுப்பது தொடர்பாக சிறிலங்காவின் பாதுகாப்பு மற்றும் சிவில் அதிகாரிகளுக்கு அமெரிக்கா பயிற்சிகளை அளித்துள்ளது.

உயிர் அச்சத்துடன் வாழும் கோத்தா

தனக்கு இன்னமும் உயிர் அச்சுறுத்தல் இருப்பதால், தொடர்ந்தும் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.

பாரிஸ், பிராங்போட்டுக்கான சேவைகளை இடைநிறுத்துகிறது சிறிலங்கன் விமானசேவை

ஜேர்மனியின் பிராங்போர்ட், மற்றும் பிரான்சின் பாரிஸ் நகரங்களுக்கான விமான சேவைகளை இடைநிறுத்தவுள்ளதாக சிறிலங்கன் விமான சேவை இன்று அறிவித்துள்ளது.

மகிந்தவின் தோல்விக்கு பசில் ராஜபக்சவே காரணம் – டிலான் பெரேரா

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கடந்த ஆண்டு அதிபர் தேர்தலில் தோல்வியடைந்ததற்கு, அவரது சகோதரர் பசில் ராஜபக்சவே காரணம் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஆறுமுகனின் அமைச்சர் கனவு கலைகிறது

இதொகா தலைவர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அமைச்சர் பதவி வழங்குவதில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்திருப்பதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

மது பாவனையில் யாழ்.மாவட்டத்துக்கு முதலிடம் – மூன்று மாவட்டங்களில் தமிழர்களின் சாதனை

சிறிலங்காவிலேயே யாழ்ப்பாண மாவட்டத்தில் தான் மது பாவனை அதிகம் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் நேற்று நடந்த போதை தடுப்பு செயல் திட்ட நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

சிறிலங்காவிடம் இருந்து வெடிபொருட்களை மீளப்பெற சீன நிறுவனம் மறுப்பு

சிறிலங்கா அரசாங்கத்துக்கு வெடிபொருட்களை விநியோகம் செய்த சீன ஆயுத ஏற்றுமதி நிறுவனம், மீதமுள்ள வெடிபொருட்களை மீளப்பெற்றுக் கொள்ள மறுத்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

புலிகளை அழித்த எனது ஆட்சிக்கால நினைவுகளைத் துடைத்தெறிய முயற்சி – மகிந்த குற்றச்சாட்டு

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டு வந்த தனது ஆட்சிக்காலம் தொடர்பான பொதுமக்களின் நினைவுகளைத் துடைத்தெறிய மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தற்போதைய அரசாங்கம் முயற்சிப்பதாக சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

உக்ரேனுடன் குற்றவாளிகளை பரிமாற்றம் செய்யும் உடன்பாடு – மகிந்தவுக்கு அடுத்த ஆப்பு

சிறிலங்காவில் தேடப்படும்- உக்ரேனில் மறைந்திருக்கும் குற்றவாளிகளை கொழும்பிடம் கையளிப்பதற்கு வசதி செய்யும், உடன்பாடு ஒன்று சிறிலங்காவுக்கும் உக்ரேனுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் முடிவினால் சிறிலங்காவுக்கும் பாதிப்பு – றோகித போகொல்லாகம

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவதால், சிறிலங்காவுக்கு நிச்சயம் பாதிப்புகள் ஏற்படும் என்று சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் றோகித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.