மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

சுதந்திரக் கட்சியின் செயற்குழுவைக் கூட்ட நீதிமன்றம் தடை – மகிந்தவின் திட்டத்துக்கு ஆப்பு

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தை, கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியின்றி கூட்டுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று மாலை தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

சுதந்திரக் கட்சி மத்தியகுழுக் கூட்டத்தை ரத்துச்செய்ய மைத்திரி உத்தரவு – தொடங்கியது பனிப்போர்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவின் அவசரக் கூட்டத்தை, சிறிலங்கா அதிபரும், சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன ரத்துச் செய்து உத்தரவிட்டுள்ளார்.

மகிந்த மீண்டும் தோற்கடிக்கப்படுவார், அவரது பிரதமர் கனவு பலிக்காது – மனம் திறந்தார் மைத்திரி

மகிந்த ராஜபக்சவுக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்படுவதற்கு தான்  முற்றிலும் எதிரானவன் என்றும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர் மீண்டும் தோற்கடிக்கப்படுவார் என்றும்  சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடகங்கள் மத்தியில் ஆற்றும் உரையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பெண்களுக்கு இடமளிக்காத ஜனநாயகப் போராளிகள்

சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் சார்பில் போட்டியிட சுயேச்சைக் குழுவொன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.

மகிந்த ராஜபக்ச வேட்புமனுவைக் கையளிக்க வரவில்லை

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் குருநாகல மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடும், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, வேட்புமனுவைக் கையளிக்க குருநாகல மாவட்டச் செயலகத்துக்கு வரவில்லை.

அமெரிக்காவில் உலக வங்கி அதிகாரிகளைச் சந்தித்த விக்னேஸ்வரன் – கொழும்பில் சர்ச்சை

அமெரிக்காவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அங்கு உலக வங்கி அதிகாரிகளுடன் கூட்டங்களை நடத்தியுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐதேகவின் வேட்புமனுவில் ஹிருணிகா கையெழுத்து – உடைகிறது சுதந்திரக் கட்சி

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட மகிந்த ராஜபக்சவுக்கு இடமளிக்கப்பட்டதையடுத்து, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பகுதியினர் ஐதேகவுடன் இணைந்து போட்டியிடவுள்ளனர்.

தேசியப்பட்டியலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடமில்லை – மைத்திரி அதிரடி

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும் தேசியப் பட்டியலில் இடமளிக்கப்படாது என்று சிறிலங்கா  அதிபரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு, வன்னி மாவட்ட வேட்பாளர்கள்

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று வன்னி மாவட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் பொன் செல்வராசா தலைமையிலும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளது.

கூட்டமைப்பு இன்று வேட்புமனுத் தாக்கல் – மீண்டும் திருமலையில் களமிறங்குகிறார் சம்பந்தன்

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, வடக்கு, கிழக்கின் ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யவுள்ளது.