மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

மகி்ந்த அணியினர் கொழும்பில் குழப்பம் விளைவிப்பதை தடுக்க கடும் பாதுகாப்பு

சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக மகிந்த ராஜபக்ச தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வரும், ஜனசட்டன பாதயாத்திரை கொழும்பை அடையும் போது, அமைதியைக் குழப்பும் வகையிலான சம்பவங்கள் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு முழு அளவில் பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கைது

அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பந்தனைச் சந்தித்தார் கனேடிய வெளிவிவகார அமைச்சர்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியன், நேற்றுமாலை எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

சிறிலங்கா இன்னும் அதிகம் செய்ய வேண்டும் – கனேடிய வெளிவிவகார அமைச்சர்

சிறிலங்காவின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், அபிவிருத்திக்கு உதவ கனடா தயாராக இருப்பதாக, கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியன் தெரிவித்தார்.

லசந்த படுகொலை – இராணுவப் புலனாய்வு அதிகாரியை அடையாளம் காட்டினார் சாரதி

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வு அதிகாரி சார்ஜன்ட் மேஜர் பிரேம் ஆனந்த உடலகமவை, நேரில் கண்ட சாட்சியான சாரதி அடையாளம் காட்டினார்.

குமாரபுரம் படுகொலை வழக்கில் இருந்து 6 சிறிலங்கா இராணுவத்தினரும் விடுதலை

இருபது ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட குமாரபுரம் படுகொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட ஆறு சிறிலங்கா இராணுவ அதிகாரிகளும் நேற்று அனுராதபுர சிறப்பு மேல் நீதிமன்ற நீதிபதியினால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பாதயாத்திரைக்கான இறுதிக்கட்டத் தயார்படுத்தலில் மகிந்த அணி

ஜன சட்டன என்ற பெயரில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக நாளை ஆரம்பிக்கவுள்ள பாதயாத்திரை தொடர்பான, இறுதிக்கட்டக் கலந்துரையாடலை சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச இன்று இரவு கண்டியில் நடத்தவுள்ளார்.

பாதயாத்திரை பற்றி வாய்திறக்காத மைத்திரி – மகிந்த அணியினர் ஏமாற்றம்

சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக கூட்டு எதிரணியினர் நாளை மறுநாள் ஆரம்பிக்கவுள்ள பாதயாத்திரை தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எந்தக் கருத்தையும் வெளியிடாதது, மகிந்த ஆதரவு அணியினரை ஏமாற்றமடையச் செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைப்பாளர் பதவிகள் பறிக்கப்படும் – மகிந்த அணியினருக்கு மைத்திரி எச்சரிக்கை

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலச் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்காத நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து கட்சியின் அமைப்பாளர் பதவிகள் பறிக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார்.

தமிழர்களுக்குத் தனிநாடு தேவையில்லை – என்கிறார் மனோ கணேசன்

தமிழர்களுக்குத் தனிநாடு தேவையில்லை என்று சிறிலங்காவின் தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஹாலி-எலவில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.