மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

அலரி மாளிகையில் ரணிலை சந்தித்துப் பேசினார் சுஸ்மா – திருமலையில் முதலீடு செய்ய அழைப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுக்கும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இன்று பிற்பகல்  முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் சிறிலங்காவை வந்தடைந்தார்

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், இரண்டு நாள் அதிகாரபூர்வப் பயணமாக இன்று மதியம், சிறிலங்காவை வந்தடைந்தார்.

வடக்கு மாகாண ஆளுனர் பதவி விலகிச் செல்வது ஏன்?

தாம் இணங்கிக் கொண்ட காலப்பகுதிக்கு மேலதிகமாகவே, பணியாற்றி விட்டதால் தான், வடக்கு மாகாண ஆளுனர் பதவியில் இருந்து விலகிச் செல்ல தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார், எச்.எம்.ஜி.எஸ்.பாலிஹக்கார.

சிறிலங்காவுடன் வலுவான உறவை எதிர்பார்க்கிறது இந்தியா – நரேந்திர மோடி

சிறிலங்காவுடன் இன்னும் வலுவான உறவுகளை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்துள்ளார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.

சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வில் தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டது

சிறிலங்காவின் 68ஆவது சுதந்திர நாள் நிகழ்வுகளின் இறுதியில் தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டது. காலிமுகத்திடலில் சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வுகள் இன்று காலை முதல் இடம்பெற்றன.

சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வில் சம்பந்தன், சுமந்திரன் பங்கேற்பு

கொழும்பில் தற்போது நடைபெற்று வரும் சிறிலங்காவின் சுதந்திர நாள் நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும், சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

சொத்துகள் வாங்கிக் குவித்தது குறித்து பசில் ராஜபக்சவிடம் 6 மணிநேரம் விசாரணை

சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் நேற்று நிதி குற்ற விசாரணைப் பிரிவு காவல்துறையினர், ஆறு மணி நேரமாக விசாரணைகளை மேற்கொண்டனர்.

சிறிலங்காவின் சுதந்திர நாள் செய்தியிலும் மகன் கைது குறித்து புலம்பியுள்ள மகிந்த

சிறிலங்காவின் 68ஆவது சுதந்திர நாள் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியில் கூட, தனது மகன் கைது செய்யப்பட்டுள்ளது மற்றும் தனது குடும்பத்தினர் பழிவாங்கப்படுவது குறித்தே முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்தது சரத் பொன்சேகாவின் ஜனநாயக கட்சி

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் ஜனநாயக கட்சி இன்று ஐக்கிய தேசிய முன்னணியுடன், கூட்டணி உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளது. 

தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு மகிந்த கடும் எதிர்ப்பு

நாளை நடக்கவுள்ள சிறிலங்காவின் 68ஆவது சுதந்திர நாள் நிகழ்வில், தமிழிலும் தேசிய கீதம் பாடப்படுவதற்கு சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.