மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

அனுமன் பாலம் – சிறிலங்கா மீதான இந்தியாவின் நேரடிப் படையெடுப்பு

இரண்டு நாடுகளுக்கும் இடையில் பாலம் அமைப்பதன் மூலம், சிறிலங்கா மீது இந்தியா நேரடியான படையெடுப்பு நடத்த முயற்சிப்பதாக பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் இன்று மீண்டும் உண்ணாவிரதம்

தம்மை விடுவிக்கக் கோரி தமிழ் அரசியல் கைதிகள், இன்று மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். அரசியல் காரணங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமது விடுதலையை விரைவுபடுத்தக் கோரி, அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

வரும் 16ஆம் நாள் கைச்சாத்திடப்படுகிறது துறைமுக நகரத் திட்டம் குறித்த புதிய உடன்பாடு

கொழும்பு துறைமுக நகரத் திட்டம் தொடர்பான புதிய உடன்பாடு வரும் 16ஆம் நாள் பீஜிங்கில் கையெழுத்திடப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி இன்று சிறிலங்கா வருகிறார்

பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் சொஹைல் அமான்  இரண்டு நாள் பயணமாக இன்று சிறிலங்காவுக்கு வரவுள்ளார்.

கொழும்பில் கால் வைக்கிறது சீன வங்கி

உலகின் மிகப் பெரிய வங்கிகளில் ஐந்தாவது இடத்தில் உள்ள சீன வங்கி (Bank of China) சிறிலங்காவில் கால்பதிக்கவுள்ளது. சீன வங்கியின் தெற்காசியப் பிராந்தியத்துக்கான தலைமையகம் கொழும்பில் அமைக்கப்படவுள்ளது.

மகாசங்கத்தை வைத்து மகிந்தவின் குடியுரிமைக்கு ஆப்பு வைக்க முனையும் ஐதேக

ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் மல்வத்தை பீடத்தில் பிளவுகளை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்ட குற்றச்சாட்டுத் தொடர்பாக, விசாரணை செய்ய ஆணைக்குழு ஒன்றை அமைக்குமாறு, சிறிலங்கா அதிபரைச் சந்தித்துக் கோருவதற்கு ஐதேக அமைச்சர்களின் கூட்டம் ஒன்றில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தியா – சிறிலங்கா இடையே பாலம் அமைக்கும் திட்டம் இல்லை – சிறிலங்கா அமைச்சர்

இந்தியாவையும் சிறிலங்காவையும் இணைக்கும் பாலத்தை அமைக்கும் திட்டம் எதுவும் கிடையாது என்று சிறிலங்காவின் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

ஐ.நா சிறப்பு நிபுணர் சிறிலங்கா வருகிறார்

சிறுபான்மையின விவகாரங்கள் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் ரிட்டா ஐசக் வரும் ஒக்ரோபர் மாதம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

விடுமுறையைக் கழிக்க வந்த நோர்வே பிரதமர் சிறிலங்கா தலைவர்களைச் சந்திக்கிறார்

விடுமுறையைக் கழிப்பதற்காக சிறிலங்கா வந்துள்ள நோர்வே பிரதமர் எர்ணா சோல்பேர்க், சிறிலங்கா அதிபர், பிரதமர் உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களின் பாதுகாப்புக்கு சிறிலங்கா அதிபர் உத்தரவாதம்

யாழ். பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, எந்த அச்சமோ, சந்தேகமோ இன்றி கல்வியைத் தொடருமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.