மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

எக்னெலிகொடவுக்கும் புலிகளுக்கும் தொடர்பு இல்லை – நீதிமன்றில் புலனாய்வுப் பிரிவு அறிக்கை

கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவுக்கு, விடுதலைப் புலிகளுடன் எந்தத் தொடர்பும் இருந்திருக்கவில்லை என்று, தமது விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக, சிறிலங்காவின் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்கா அமைச்சர் சீனாவில் ஆய்வுப் பயணம்

அம்பாந்தோட்டையில் சீனாவின் முதலீட்டில் பாரிய கைத்தொழில் வலயத்தை அமைப்பது தொடர்பான ஆய்வுக்காக சிறிலங்காவின் சிறப்பு பணிகளுக்கான அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம நேற்று சீனாவுக்குப் பயணமாகியுள்ளார்.

எந்த சக்தியாலும் தடுக்க முடியாது – மைத்திரிக்கு மகிந்த பதிலடி

அரசியல் கட்சிகளின் உருவாக்கத்தை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

செப்ரெம்பர் 1ஆம் நாள் கொழும்பு வருகிறார் ஐ.நா பொதுச்செயலர்

ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், செப்ரெம்பர் மாதம் 1ஆம் நாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க மருத்துவர்களுக்கு நெறிமுறை அனுமதி அளிக்கப்பட்டதா? – பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம்

யாழ்ப்பாணத்தில் அமெரிக்க விமானப்படை மருத்துவர்கள் நடத்திய மருத்துவ முகாமில், இலங்கைக் குடிமக்களிடம் இருந்து இரத்த மாதிரிகளை பரிசோதனைக்காக பெறுவதற்கு சிறிலங்காவின் உரிய அதிகாரிகளிடம் நெறிமுறை அனுமதி பெறப்பட்டதா என்று, தேசிய பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

வடக்கில் விகாரைகள், புத்தர் சிலைகளை அமைக்க பிக்குகளுக்கு உரிமை உள்ளதாம்

வடக்கில் எந்தப் பகுதியிலும் பௌத்த விகாரைகளை கட்டுவதற்கோ, புத்தர் சிலைகளை வைப்பதற்கோ உரிமை உள்ளது என்று சிறிலங்காவின் புனர்வாழ்வு, மீள்குடியேற்ற மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

கிழக்கில் படைமுகாம்கள் அகற்றப்படாது – சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு

கிழக்கு மாகாணத்தில் உள்ள முக்கியமான சிறிலங்கா இராணுவ முகாம்கள் அகற்றப்படாது என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

மென்சக்தியின் செல்வாக்கு குறித்து ஆராய்கிறது சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்புக் கருத்தரங்கு

சிறிலங்கா இராணுவம் ஆண்டு தோறும் நடத்தும் பாதுகாப்புக் கருத்தரங்குத் தொடரில், இந்த ஆண்டுக்கான கருத்தரங்கு, எதிர்வரும் செப்ரெம்பர் 1ஆம் நாள் ஆரம்பமாகவுள்ளது.

நாடாளுமன்ற ஆசனங்களையும் இழக்க நேரிடும் – மைத்திரி எச்சரிக்கை

கட்சியின் ஒழுக்கத்தை மீறி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்த முனைபவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளையும் இழக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

முன்னாள் போராளிகளை பரிசோதிக்க அமெரிக்க மருத்துவர்கள் – அரசாங்கம் நிராகரிப்பு

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளைப் பரிசோதனை செய்வதற்கு அமெரிக்க மருத்துவர்கள் தேவையில்லை என்று, சிறிலங்காவின் சுகாதார அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.