மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

தமிழர்களை கடத்திய சிறிலங்கா கடற்படை புலனாய்வு பணிப்பாளர் விரைவில் கைது

கொழும்பில் இரண்டு தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறிலங்கா கடற்படையின் முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் றியர் அட்மிரல் ஆனந்த குருகே உள்ளிட்ட இரண்டு அதிகாரிகள் விரைவில் கைது செய்யப்படவுள்ளனர்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சந்திக்க சுவாமிநாதனை அனுப்புகிறார் ரணில்

வவுனியாவில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ள காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களை, சிறிலங்காவின் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இன்று சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

மதுரையில் முள்வேலி ஊடாக விமானத்துக்குச் சென்ற சிறிலங்கன் விமான சேவை பணியாளர்கள்

தமிழ்நாட்டில் ஏறு தழுவுதல் தடைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தினால், மதுரையில் சிறிலங்கன் விமானசேவை விமானிகளும், பணியாளர்களும் முள்வேலிகளைக் கடந்து விமானத்துக்குச் செல்லும் காட்சி அடங்கிய காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பிராந்திய தூதரகப் பணியகம்

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பிராந்திய தூதரக சேவைகளுக்கான பணியகம் ஒன்று யாழ்ப்பாணத்தில் நாளை திறந்து வைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திலேயே இந்த தூதரக சேவைகளுக்கான பணியகம் இயங்கவுள்ளது.

அம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டங்களால் சிறிலங்காவுடனான உறவுகள் கெடாது – சீனா

அம்பாந்தோட்டையில் அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களினால், சிறிலங்காவுடனான சீனாவின் உறவுகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்று சீனத் தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மிலேனியம் சவால் உயர்மட்ட குழு சிறிலங்கா அமைச்சர்களுடன் பேச்சு

அமெரிக்காவின் மிலேனியம் சவால் ஒத்துழைப்பு அமைப்பின் பிராந்திய பிரதி உதவித் தலைவர், பாத்திமா சமர் சிறிலங்காவுக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

லசந்தவைப் படுகொலை செய்தவரின் அடையாளங்களை வெளிப்படுத்தத் தயார் – மகிந்த ராஜபக்ச

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவைப் படுகொலை செய்தவரின் அடையாளங்களை வெளிப்படுத்த தயார் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகா அளித்த தகவல்களின் அடிப்படையில் கோத்தாவிடம் விரைவில் விசாரணை

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விரைவில் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.

தலதா மாளிகைக்கு முன்பாக பௌத்த பிக்குணி சாகும்வரை உண்ணாவிரதம்

சிறிலங்கா அரசாங்கம் அரசியலமைப்பு மாற்றத்தின் மூலம் நாட்டைப் பிரிக்க முனைவதாக கூறி, கண்டியில் தலதா மாளிகைக்கு முன்பாக பௌத்த பிக்குணி ஒருவர் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

ட்ரம்பின் வெளிவிவகாரக் கொள்கையை வரவேற்கிறார் மகிந்த

அமெரிக்காவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றுள்ள டொனால்ட் ட்ரம்பின் வெளிவிவகாரக் கொள்கையை வரவேற்பதாக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.