மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவேன் – சிறிலங்கா அதிபர் சூளுரை

தேசிய பாதுகாப்பையும், பிராந்திய பாதுகாப்பையும் பாதுகாப்பதில் சிறிலங்கா அரசாங்கம் முழுமையான அர்ப்பணிப்புடன் இருக்கிறது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சீனாவில் அரசியல் கற்கவுள்ளார் கோத்தா

சீன பல்கலைக்கழகம் ஒன்றில் அரசியல் தொடர்பான மூன்றாண்டு கற்கைநெறி ஒன்றை பயில்வதற்கு சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச முடிவு செய்திருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

போர்க்குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் – சரத் பொன்சேகா

போர்க்குற்றங்களை இழைத்த சிறிலங்கா படையினருக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதியும், பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

திருகோணமலை துறைமுக அபிவிருத்தி குறித்து இந்தியா, ஜப்பானுடன் பேச்சு – ரணில்

திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது குறித்து, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மீது இந்தியாவுக்கு ஆர்வமில்லையாம்

திருகோணமலை மீது இந்தியா ஆர்வம் கொண்டிருக்கவில்லை என்று இந்தியத் தூதரகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

காணாமற்போனோர் பணியக சட்டம் – முட்டுக்கட்டை போட்டுள்ள சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட காணாமற்போனோர் பணியகம் தொடர்பான சட்டத்தின் சில அம்சங்கள் குறித்து கரிசனை வெளியிட்டு, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை சிறிலங்கா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளது.

சித்திரவதை குறித்த ஐ.நா அறிக்கையை சிறிலங்கா நிராகரிப்பு – பதில் அறிக்கை தயாரிக்கிறது

சிறிலங்காவில் தொடர்ந்தும் சித்திரவதை கலாசாரம் நீடிப்பதாக, ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் ஜூவான் மென்டஸ் சமர்ப்பித்துள்ள அறிக்கையை நிராகரித்து, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா அரசாங்கம் பதில் அறிக்கையை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளது.

சிறிலங்கா விரும்பும் போது எட்காவில் கையெழுத்திடலாம் – இந்தியத் தூதுவர்

இந்தியாவுடன் எட்கா உள்ளிட்ட எந்த உடன்பாட்டிலும், தாம் விரும்பும் போது சிறிலங்கா கையெழுத்திடலாம் என்றும், இந்த விடயத்தில் இந்தியா அழுத்தங்களைக் கொடுக்காது என்றும், சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.

இந்தியத் தூதுவருடன் சம்பந்தன் கலந்துரையாடல்

சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவராக அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்ட தரன்ஜித் சிங் சந்துவை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று முன்தினம் சந்தித்துக் கலந்துரையாடினார்.

சுவாமிநாதனை வைத்து இழுத்தடிக்க முயன்ற சிறிலங்கா அரசு – கடைசி நேரத்தில் மாறிய முடிவு

வவுனியாவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த, காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களை சந்திக்க பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவை அனுப்பும் முடிவு கடைசி நேரத்திலேயே எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.