மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

பொதுமக்களின் காணிகளை இராணுவத்தினர் உடன் விடுவிக்க வேண்டும் – சுமந்திரன்

கிளிநொச்சி இராணுவ முகாமுக்குள் இரா.சம்பந்தன் உள்ளிட்டவர்கள் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். சிறிலங்கா இராணுவத்தினரிடம் உள்ள பொதுமக்களின் காணிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

நாளை சிறிலங்கா அதிபரைச் சந்திக்கிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நாளை முக்கிய பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனி அரசை நிறுவ கூட்டமைப்பும், தமிழ் அரசுக் கட்சியும் முயற்சி- உயர்நீதிமன்றில் மனு

சிறிலங்காவில் தனி அரசு ஒன்றை உருவாக்குவதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அகில இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், முயற்சிப்பதாக குற்றம்சாட்டி, உயர்நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வடமாகாணசபையின் தீர்மானம் பெறுமதியற்றது – ஒற்றையாட்சிக்குள் தான் தீர்வு என்கிறது சிறிலங்கா

சமஸ்டி ஆட்சிமுறை தொடர்பாக வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்குப் பெறுமானம் கிடையாது என்று, சிறிலங்காவின் கல்வி அமைச்சரும், ஐதேகவின்  பிரதிப் பொதுச்செயலருமான  அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கடல்சார் அனர்த்த அவதானிப்பு நிலையத்தை சிறிலங்காவில் அமைக்கிறது சீனா

சிறிலங்காவில் கடல்சார் அனர்த்த அவதானிப்பு நிலையம் ஒன்றை அமைப்பதற்கு சீனா உதவி வழங்கவுள்ளது.  மீனவர்கள் கடல் அனர்த்தங்களில் சிக்கிக் கொள்வதைத் தடுக்கவே இந்த அவதானிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது.

வடக்கு மாகாணசபையைக் கலைக்க வேண்டும் – உதய கம்மன்பில போர்க்கொடி

வடக்கு மாகாணசபையைக் கலைத்து விட்டு, அதன் நிர்வாகத்தைக் கையில் எடுக்குமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில கோரிக்கை விடுத்துள்ளார்.

கிளிநொச்சியில் வைத்தே புலிகளின் முன்னாள் தளபதி ராமிடம் விசாரணை

திருக்கோவில்- தம்பிலுவில் பகுதியில் உள்ள தமது வீட்டில் வைத்துக் கடத்திச் செல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட முன்னாள் தளபதி ராம், கிளிநொச்சியில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமஸ்டி கோரிக்கைக்கு எதிராக நீதிமன்றம் செல்வோம் – மிரட்டுகிறது ஹெல உறுமய

சமஸ்டிக் கோரிக்கைக்கு எதிராக, நீதிமன்றம் செல்லப் போவதாக சிறிலங்கா அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஜாதிக ஹெல உறுமய எச்சரித்துள்ளது.

வடமாகாணசபையின் தீர்வுத் திட்டத்தை சிறிலங்கா அரசு பரிசீலிக்க வேண்டும் – சுமந்திரன்

வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீள இணைத்து, சமஸ்டி ஆட்சிமுறையில் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ள வலியுறுத்தும், வடக்கு மாகாணசபையின் தீர்மானத்தை, சிறிலங்கா அரசாங்கமும், நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

சம்பந்தனைக் கைது செய்ய முடியுமா? – சவால் விடுக்கிறார் கம்மன்பில

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனைக் கைது செய்ய முடியுமா என்று, சிறிலங்காவின் புதிய காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவிடம் சவால் விடுத்துள்ளார் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில.