மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

முள்ளிக்குளம் கடற்படை முகாமை அகற்ற மறுப்பு – விவசாயக் காணிகளை விடுவிக்க இணக்கம்

மன்னார்- முள்ளிக்குளத்தில் சிறிலங்கா கடற்படையினர் வசமுள்ள விவசாயக் காணிகளை விடுவிப்பதற்கு இணங்கம் காணப்பட்டுள்ள போதிலும், கடற்படை முகாமை அகற்றுவதற்கு சிறிலங்கா அரச தரப்பு மறுப்புத் தெரிவித்துள்ளது.

நீல நிறத்துக்கு மாறுகிறது சிறிலங்கா காவல்துறை சீருடை

சிறிலங்கா காவல்துறை சீருடையை நீல நிறத்துக்கு மாற்றத் திட்டமிட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

கபொத சா. தரத் தேர்வு முடிவு- முதல் 25 கல்வி வலயங்களில் வடக்கிற்கு இடமில்லை

அண்மையில் வெளியாகிய கபொத சாதாரண தரத் தேர்வு முடிவுகளின்படி, மாணவர்களின் தேர்ச்சி வீதத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள முதல் 25 இடங்களைப் பிடித்த கல்வி வலயங்களின் பட்டியலில் வடக்கு மாகாணத்தின் எந்தவொரு கல்வி வலயமும் இடம்பெறவில்லை.

அரசியல் தலையீடுகளால் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் இழுபறி

அரசியல் தலையீடுகளால் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான நியமனத்தில் இழுபறிகள் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜெனிவா வாக்குறுதிகளை சிறிலங்கா அவசரமாக நிறைவேற்ற வேண்டும் – ஜேர்மனி

ஜெனிவாவில் 2015இல் சிறிலங்கா அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவதற்கு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணம் இது என்று ஜேர்மனி தெரிவித்துள்ளது.

குப்பைமேடு சரிந்த இடத்தில் பரவியுள்ள மீதேன் வாயு – ஜப்பானிய நிபுணர்கள் எச்சரிக்கை

மீதொட்டமுல்லவில் குப்பை மேடு சரிந்த பகுதியில் மீதேன் வாயுவின் அளவு அதிகமாக இருப்பதாக ஜப்பானிய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சாதாரணதரத் தேர்வு முடிவுகளில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் படுமோசம்

அண்மையில் வெளியான கபொத சாதாரண தரத் தேர்வு முடிவுகளில், திருகோணமலை கல்வி வலயத்தைச் சேர்ந்த ஐந்து பாடசாலைகளில் இருந்து எந்தவொரு மாணவரும் தேர்ச்சி பெறவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

சிறிலங்காவில் 95 புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வது குறித்த நேர்காணல் ஆரம்பம்

சிறிலங்காவில் புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான நேர்காணல் நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது.

கொழும்பில் ஐ.நா வெசாக் கொண்டாட்டங்களை ஆரம்பித்து வைக்கிறார் மோடி

சிறிலங்காவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா வெசாக் கொண்டாட்டங்களை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆரம்பித்து வைப்பார் என்று சிறிலங்கா அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

பிரித்தானிய அமைச்சரின் சிறிலங்கா பயணம் ரத்து

பிரித்தானியாவின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக அமைச்சர் அலோக் சர்மா சிறிலங்காவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தை ரத்துச் செய்துள்ளார்.