மேலும்

செய்தியாளர்: கி.தவசீலன்

முன்னாள் புலனாய்வுத் தலைவரிடம் இன்றும் விசாரணை

சிறிலங்காவின் முன்னாள் தேசிய புலனாய்வுப் பிரிவுத் தலைவர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவிடம் இன்றும் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சிறிலங்காவுக்கு அதிக கொடைகளை வழங்கியது அமெரிக்கா – அதிக கடன்களை வழங்கியது சீனா

2016ஆம் ஆண்டில் சிறிலங்காவுக்கு அதிகளவு கொடைகளை வழங்கிய நாடாக அமெரிக்காவும், அதிகளவு கடன்களை வழங்கிய நாடாக சீனாவும் இருப்பதாக சிறிலங்கா அரசாங்கத்தின் அதிகாரபூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய முதலீடுகளை அதிகரிப்பது குறித்து அருண் ஜெட்லியுடன் மங்கள சமரவீர பேச்சு

சிறிலங்காவில் எதிர்காலத்தில் முதலீடுகளை அதிகரிப்பது தொடர்பாக, இந்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியுடன், சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

விழிப்பு நிலையில் புலனாய்வுப் பிரிவுகள்

வெறுப்புணர்வைத் தூண்டுவதன் மூலம் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் தொடர்பாக, அரச புலனாய்வுப் பிரிவுகள் விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

விக்கியிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை – சுமந்திரன்

வடக்கு அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், நேற்று மாலை வரையில் சாதகமான எந்த பதிலும், முதலமைச்சரிடம் இருந்து கிடைக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் போராளிக்கு மொனராகல மேல்நீதிமன்றம் மரணதண்டனை

தனமல்விலவில் மூன்று சிறிலங்கா காவல்துறையினரை சுட்டுக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினருக்கு, மரணதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிறிலங்கா அரச, பாதுகாப்பு உயர்மட்டங்களுடன் பாகிஸ்தான் கடற்படைத் தளபதி பேச்சு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் சகாவுல்லா, சிறிலங்கா அதிபர் , பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்  மற்றும் பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகளைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

மகிந்தவின் சாரதி கப்டன் திஸ்ஸ கைது

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் முன்னாள் சாரதியான கப்டன் திஸ்ஸ விமலசேன நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

ஹுசேன் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் – ஜெனிவாவில் முறையிடப் போகிறாராம் சரத் வீரசேகர

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனுக்கு எதிராக, ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தலைவரிடம் முறைப்பாடு ஒன்றைச் செய்யவுள்ளதாக, சிறிலங்காவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் றியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

மாகாணசபைத் தேர்தலைப் பிற்போடும் அதிகாரம் இல்லை – மகிந்த தேசப்பிரிய

மாகாணசபைத் தேர்தல்களைப் பிற்போடுவதற்கு அமைச்சர்களுக்கோ வேறு எவருக்குமோ அதிகாரம் இல்லை என்று சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.