மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

சிறிலங்காவின் முக்கிய அமைச்சர்கள் இருவர் இன்று சீனாவுக்குப் பயணம்

சிறிலங்காவின் இரண்டு முக்கிய அமைச்சர்கள் இன்று சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர். மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம மற்றும் தென்மாகாண அபிவிருத்தி மற்றும் சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க ஆகிய இருவருமே, சீனாவுக்கு இன்று பயணமாகவுள்ளனர்.

வெளிவிவகார அமைச்சு மறுசீரமைப்புக்கு இந்திய நிபுணர்களின் உதவியைப் பெறத் தடை

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சை மீளமைப்புச் செய்வது தொடர்பாக இந்திய நிபுணர்களின் உதவியைப் பெறும் முயற்சிக்கு, சிறிலங்கா அமைச்சரவையின் பொருளாதார முகாமைத்துவக் குழு அனுமதி மறுத்துள்ளது.

சிங்கப்பூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் ராஜித சேனாரத்ன – பார்வையிட்டார் மைத்திரி

சிங்கப்பூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றுப் பார்வையிட்டார்.

துறைமுக நகரத் திட்டம் குறித்து சீனாவுடன் புதிய உடன்பாடு – மலிக் சமரவிக்கிரம

துறைமுக நகரத் திட்டம் தொடர்பாக சீனாவுடன் அடுத்த சில வாரங்களுக்குள் புதிய உடன்பாடு கையெழுத்திடப்படும் என்று சிறிலங்காவின் அபிவிருத்தி மூலோபாய மற்றும் அனைத்துலக வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவி்த்துள்ளார்.

நீண்டநேரம் நடந்த அமெரிக்க – சிறிலங்கா கூட்டு கலந்துரையாடல்

அமெரிக்க- சிறிலங்கா கூட்டுக் கலந்துரையாடல் வொசிங்டனில் உள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜோர்ஜ் மார்ஷல் கருத்தரங்க மண்டபத்தில் நேற்று- வெள்ளிக்கிழமை- இடம்பெற்றது.

மீண்டும் கொழும்புத் துறைமுகம் வந்தது சீனக் கடற்படைக் கப்பல்

சீனக் கடற்படையின் மிகப்பெரிய மருத்துவமனைக் கப்பல் ஒன்று கொழும்புத் துறைமுகத்துக்கு இன்று வந்துள்ளது. சீனக் கடற்படைக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த போது, சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.

இராணுவமய நீக்கம் நல்லிணக்கத்துக்கு முக்கியம் – ஒப்புக்கொண்டார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்

இராணுவமய நீக்கம் என்பது நல்லிணக்கத்தின் முக்கியமான ஒரு பகுதி என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஏற்றுக்கொண்டுள்ளார்.

அச்சமான அரசியல் சூழலை சிறிலங்கா மக்கள் நிராகரித்துள்ளனர் – நிஷா பிஸ்வால்

அச்சமான அரசியல் சூழலை சிறிலங்கா மக்கள் ஒன்றுபட்டு நிராகரித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார், தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால்.

போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டவர்கள் பங்கேற்கலாம் – அமெரிக்காவில் மங்கள சமரவீர

சிறிலங்காவில் போரின் போது நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கவுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வெளிநாட்டவர்கள் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் இன்னமும் திறந்த நிலையிலேயே இருப்பதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள  சமரவீர தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் நல்லிணக்க முயற்சிகளைப் பாராட்டுகிறார் ஜோன் கெரி – மங்களவைச் சந்திப்பு

சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்க முயற்சிகளை அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி பாராட்டியுள்ளார்.